ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Ancient Mesopotamia}}
'''ஈலம்''' (Elam) இன்றைய தென் மேற்கு [[ஈரான்|ஈரானில்]] செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, [[குசெசுத்தான்]], [[ஈலம் மாகாணம்]] ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து [[கெர்மான் மாகாணம்|கெர்மான் மாகாணத்தில்]] உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான [[சபோல்]] (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் [[ஈராக்]]கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது. பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதியின் முதன்மையான் அரசியல் சக்திகளில் ஒன்றாக ஈல அரசுகள் விளங்கின.<ref>Elam: surveys of political history and archaeology, Elizabeth Carter and Matthew W. Stolper, University of California Press, 1984, p. 3</ref>
 
பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. [[நடு வெண்கலக் காலம்|நடு வெண்கலக் கால]] ஈலம் [[அன்சான்|அன்சானை]] (Anshan) மையமாகக் கொண்டு [[ஈரானியச் சமவெளி]]யிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த [[சூசா (ஈரான்)|சூசா]]வை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது.<ref>Elam: surveys of political history and archaeology, Elizabeth Carter and Matthew W. Stolper, University of California Press, 1984, p. 4</ref> இதன் பண்பாடு, [[குட்டியப் பேரரசு|குட்டியப் பேரரசில்]], சிறப்பாக [[ஆக்கிமெனிட் வம்சம்|ஆக்கிமெனிட் வம்சக்]] காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் [[ஈல மொழி]] பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.
 
[[ஈல மொழி]]க்குப் பிற எந்த மொழிகளுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. [[சுமேரிய மொழி]]யைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், [[ஈல-திராவிடம்]] என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
 
==சொற்பிறப்பு==
ஈல மக்கள் தமது நாட்டை ''ஹல்தம்தி'' ''(Haltamti)'' என அழைத்தனர்.<ref name="Kent 1953 53">{{cite book|last=Kent|first=Roland|title=Old Persian: Grammar, Texts & Lexicon|series=American Oriental Series|volume=33)|publisher=American Oriental Society|year=1953|isbn=0-940490-33-1|pages=53}}</ref> சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே ''ஈலம்'', ''ஈலமு'' ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர்.<ref>{{cite book|editor=Jeremy Black, Andrew George & Nicholas Postgate (eds.)|title=A Concise Dictionary of Akkadian|publisher=Harrassowitz Verlag|year=1999|isbn=3-447-04225-7|page=68}}</ref> ஈப்ரூக்களின் பைபிளிலும் இது ''ஈலம்'' என்றே குறிப்பிடப்படுகிறது.
 
 
வரிசை 22:
[[File:Choghazanbil2.jpg|left|thumb|200px|தற்போது [[சோகா சன்பில்]] (Chogha Zanbil) என அழைக்கப்படும் "சிகரட்" (ziggurat) களம்.]]
முதனிலை ஈல நாகரிகம் [[டைகிரிசு]], [[இயூபிரட்டீசு]] ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்குக் கிழக்கே உருவாகி வளர்ந்தது. இது தாழ்ந்த நிலத்தையும் அருகிலேயே வடக்கிலும், கிழக்கிலும் மேட்டு நிலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். குறைந்தது மூன்று முதனிலை ஈல அரசுகள் இணைந்தே ஈலம் உருவானதாகத் தெரிகிறது. இவை [[அன்சான்]], [[அவான்]], [[சிமாசுக்கி]] என்பன. இவற்றுள் "அன்சான்", தற்கால "ஃபார்சு" பகுதியிலும், "சிமாசுக்கி" தற்காலக் கேர்மனிலும் அமைந்திருந்தன. "அவான்" தற்கால [[லுரிசுத்தான்]] ஆக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவானைப் பற்றிய குறிப்புக்கள் பொதுவாக அன்சானைப் பற்றிய குறிப்புக்களிலும் பழமையானவை. இவ்விரு அரசுகளுமே ஒரே பகுதியில் வெவ்வேறு காலப் பகுதியில் இருந்திருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து. இந்த மையப் பகுதியுடன், இன்றைய "குசெசுத்தான்" ஆன "சுசியானா" அவ்வப்போது இணைந்தும் பிரிந்தும் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுடன் இப் பகுதிக்கு வெளியிலும் ஈரானியச் சமவெளிகளில் முதனிலை ஈலக் களங்கள் உள்ளன. இவற்றுள் [[வாராக்சே]], இன்றைய காசான் நகரின் புறநகர்ப் பகுதியான [[சியால்க்]], கெர்மான் மாகாணத்தில் உள்ள [[சிரோஃப்ட்]] என்பன அடங்கும். பழைய ஈலக் காலத்தில், சுமேரியரின் படையெடுப்புகளுக்கு எதிராகவே சிறிய அரசுகள் இணைந்து ஈல அரசு உருவானது. இவ்வரசுக்குள் அடங்கிய பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட வளங்களை திறமையான முறையில் பகிர்ந்து கொள்வதற்கு வசதியை வழங்கக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அரசின் கீழ் இப்பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருப்பதற்கான வல்லமையே ஈலவர்களின் வலிமையாக இருந்தது. ஒரு கூட்டாட்சி அரச அமைப்பின் அடிப்படையிலேயே இதை அவர்கள் செய்ய முடிந்தது.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
{{Commons category|Elam}}
*[http://www.iranchamber.com/history/elamite/elamite.php ஈலப் பேரரசின் வரலாறு]
*[http://www.iranchamber.com/art/articles/art_of_elamites.php ஈலக் கலைகள்]
*[http://www.allempires.com/article/index.php?q=The_Elamite_Empire All Empires – ஈலப் பேரரசு]
*[http://telugutanam.blogspot.com/2006/02/scholars-see-telugu-mesopotamia-link.html தெலுங்கு, மெசொப்பொத்தேமியா தொடர்புகள்]
*[http://www.cappuccinomag.com/iranologyenglish/001141.shtml ஈரானியர்களுக்கு முந்திய ஈரான்]
*[http://www.iranicaonline.org/articles/elam-index ஈரானிக்கா கலைக்களஞ்சியம்: ஈலம்]
*[http://www.systemdynamics.org/conf2002/extras/SVERD1_S.PDF கடந்த 120,000 ஆண்டுகளில், மொழிகளின் தோற்றத்துக்கும் பரவலுக்குமான மாதிரியாக்கம்.]
* Hamid-Reza Hosseini, ''Shush at the foot of [[Louvre]]'' (''Shush dar dāman-e Louvre''), in Persian, Jadid Online, 10 March 2009, [http://www.jadidonline.com/story/10032009/frnk/susa_shush].<br />Audio slideshow: [http://www.jadidonline.com/images/stories/flash_multimedia/Susa_shush_test/susa_high.html] (6 நிமி 31 செக்).
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது