"நீதித் தலைவர்கள் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Judecători (carte))
==நூலின் உள்ளடக்கம்==
'''நீதித் தலைவர்கள்''' என்னும் இந்நூல் இசுரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றியதாகும். இக்காலக் கட்டத்தில் இறைவன் இசுரயேல் மக்களுக்குத் தாம் தெரிந்துகொண்டோர் மூலமாக விடுதலை அளித்து அவர்களைப் பாதுகாத்து வந்தார். இவர்களுள் பெரும்பாலோர் வலிமைமிகு வீரர்களாகவும் படைத் தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர்.
 
 
இசுரயேலரின் வாழ்வும் வெற்றியும் கடவுளிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைப் பொறுத்தே அமைந்திருந்தது என்பதையும் அவர்களது நம்பிக்கையின்மை அவர்களுக்கு அழிவையே கொணர்ந்தது என்பதையும் இந்நூல் வலியுறுத்திக் கூறுகின்றது. அவர்கள் இறைவனைக் கைவிட்டு அவதியுற்ற காலத்திலும் மனம்மாறி அவரிடம் திரும்பிவந்தால், அவர் தம் மக்களைத் தவறாது பாதுகாத்து அவர்களுக்கு விடுதலை அளிப்பார் என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/856062" இருந்து மீள்விக்கப்பட்டது