புலம்பல் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு
clean up using AWB
வரிசை 7:
 
'''புலம்பல்''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் אֵיכָה‎ (Eikha, ʾēḫā(h)) என்னும் பெயர் கொண்டது. "அந்தோ!" ("ஐயோ!") எனப் பொருள்படும் அச்சொல்லே இந்நூலின் தொடக்கமாக இருப்பதால் அப்பெயர் கொடுக்கப்பட்டது. கிரேக்க மொழிபெயர்ப்பு "எரேமியாவின் புலம்பல்" என்னும் பொருள்கொண்ட "Threnoi Hieremiou" என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. இலத்தீன் மொழிபெயர்ப்பும் அவ்வாறே அமைந்தது ("Lamentationes"). இந்நூலின் பழைய தமிழ் மொழிபெயர்ப்பு '''புலம்பல் ஆகமம்''' என்னும் பெயர் கொண்டிருந்தது.
 
 
கிறித்தவர்கள் இந்நூலின் பகுதிகளைப் பெரிய வெள்ளிக் கிழமையில் இயேசுவின் துன்பங்களை நினைவுகூரும் வண்ணம் அறிக்கையிட்டு தியானிப்பது வழக்கம்.
வரி 16 ⟶ 15:
 
"புலம்பல்" என்னும் இத்திருநூல் ஐந்து எபிரேய அகர வரிசைக் கவிதைகளால் ஆனது. கி.மு. 586இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இந்நூல் அமைந்துள்ளது.
 
 
எரேமியா என்னும் இறைவாக்கினரின் காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்நூலில், அவலச் சுவையே மேலோங்கி நிற்கின்றது. ஆயினும், கடவுளின் அருளினால் கிடைக்கவிருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் ஆங்காங்கே வெளிப்படுகிறது. இக்கவிதைகள், மேற்குறிப்பிட்ட பேரழிவின் நினைவு நாளுக்கான நோன்பு வழிபாட்டில், யூதர்களால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
'''முதல் புலம்பல்''' (அதிகாரம் 1): எருசலேம் அழிவுற்ற நிலையில் தன் துயரங்களை எடுத்துக் கூறி, ஒரு "கைம்பெண்" போல ஒப்பாரி வைக்கிறது.
வரி 30 ⟶ 27:
 
'''ஐந்தாம் புலம்பல்''' (அதிகாரம் 5): மக்கள் மனம் திரும்பி கடவுளை நாடிச்சென்று மன்னிப்பு அடையும்படியாக வேண்டல்.
 
 
முதல் நான்கு புலம்பல் கவிதைகளும் எபிரேய மொழி அகர வரிசைப்படி தொடங்குகின்றன. பாடல் 1, 2, 4 ஆகிய மூன்று பாடல்கள் ஒவ்வொன்றிலும் 22 வசனங்கள் உள்ளன. எபிரேய அரிச்சுவடியில் உள்ள அனைத்து 22 எழுத்துக்களும் தொடக்கமாக வரிசைப்படி அமைந்துள்ளன.
வரி 37 ⟶ 33:
 
ஐந்தாம் கவிதை அகர வரிசைப்படி வரவில்லை. ஆனால் அங்கும் 22 வசனங்கள் உள்ளன.
 
 
தமிழ்ச் செய்யுள் வகையில் ''அந்தாதி'' இருப்பதுபோல, எபிரேய செய்யுள் அமைப்பாக அகர வரிசை ஓர் அணியாக வடிவம் பெறுகிறது (acrostics).
 
 
இந்நூலின் ஆசிரியர் எரேமியா இறைவாக்கினர் என்பது மரபு. ஆயினும் இந்நூலின் ஓரிடத்திலும் எரேமியாவின் பெயர் வரவில்லை. '''இரண்டாம் குறிப்பேடு''' என்னும் விவிலிய நூல் "யோசியாவுக்காக எரேமியாவும் ஓர் இரங்கற்பா இயற்றினார்" என்று கூறுகிறது (2 குறிப்பேடு 35:25). ஆயினும், புலம்பல் நூலை இயற்றியவர் பலராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
வரி 65 ⟶ 59:
<br>பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை
<br>அளித்திடுவார் யாருமிலர்!
 
 
==புலம்பல் நூலின் உட்பிரிவுகள்==
வரி 94 ⟶ 87:
| 1206
|}
 
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/புலம்பல்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது