சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Sarawak
சி →‎வரலாறு: clean up using AWB
வரிசை 47:
[[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் போர்ணியோ தீவின் கிழக்குக் கரையில் [[போர்த்துக்கல்|போர்த்துக்கீசர்]] வந்திறங்கினர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டில்]] சுல்தான் டெங்கா என்பவனால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[புருணை]] சுல்தானகத்தினால் ஆளப்பட்டது. [[1841]] ஆம் ஆண்டில் [[ஜேம்ஸ் புரூக்]] இங்கு வந்திறங்கினான். இவன் வந்த காலத்தில் அங்கு [[தயாக் மக்கள்|தயாக்]] பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினான். புரூக் சூல்தானுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டான். அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. சுல்தான் 1841, [[செப்டம்பர் 24]] இல் ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநர் ஆக்கினான். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்து அங்கு [[வெள்ளை ராஜாக்கள்|வெள்ளை ராஜா]] வம்சத்தை ஏற்படுத்தினான்.
 
[[படிமம்:Sir_James_Brooke_Sir James Brooke (1847)_by_Francis_Grant by Francis Grant.jpg|thumb|left|சேர் [[ஜேம்ஸ் புரூக்]], சரவாக்கின் ராஜா]]
[[1842]], [[ஆகஸ்ட் 18]] ஆம் நாள் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டான். அவன் [[1868]] இல் இறக்கும் வரை சரவாக்கை ஆட்சி செய்தான். அதன் பின்னர் அவனது மருமகன் [[சார்ல்ஸ் புரூக், சரவாக் அரசன்|சார்ல்ஸ் புரூக்]] [[1917]] ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தான். அவன் இறந்த பின்னர் அவனது மகன் [[சார்ல்ஸ் வைனர் புரூக்]] ஆட்சி செய்தான்<ref>[http://www.sarawak.com.my/travel_features/bk_review/brooke.html]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது