ஆய்த எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
:அஃகான் என்னும் பெயரிட்டு இதனை முன்னோர் வழங்கிவந்தனர். தொல்காப்பியரும் அவ்வாறே இதனை வழங்குகிறார். நன்னூல் அஃகேனம் என்னும் பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. தனிநிலை என்னும் சொல்லாலும் இதனைக் குறிப்பிடுகிறது.
 
:தமிழ் எழுத்துக்களை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறைமையில் உயிரும் உயிரும் புணரும்மோது தோன்றும் உடம்படுமெய் தானே தெரியவரும். இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர்.
===ஆய்தம் = ஒலி நுணுக்கம்===
:தமிழில் ஆய்த எழுத்து வல்லெழுத்து ஒலியை நுணுக்கம் செய்யப் பயன்படுத்தப்படும்.
வரிசை 65:
 
===வடமொழி ஒலி ஒப்பீடு===
:சமற்கிருதத்தில் (வடமொழியில்) இந்த ஒலியெழுத்தை அஹ என ஒலிப்பர். இந்த மொழியில் இந்த ஒலி மொழியின் இறுதி ஒலியாக வரும். தமிழில் இந்த ஒலி இறுதி ஒலியாக வராது. வல்லின எழுத்துக்கள் ஆறும் ஊர்ந்துவரும் நுண்ணொலி எழுத்தாக இடையில் மட்டுமே வரும்.
 
==திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம்==
திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எனவே அதனைத் தனியே குறிப்பிடவேண்டியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆய்த_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது