ந. பிச்சமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "கவிஞர்கள்"; Quick-adding category "தமிழ்க் கவிஞர்கள்" (using HotCat)
சி clean up
வரிசை 16:
*''மாங்காய் தலை''
*''காபூலிக் குழந்தைகள்''
*''விஜயதசமி''
 
==ஆர்வமூட்டும் செய்திகள்==
* பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை "பிச்சை" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார்.
* பிச்சமூர்த்தி, [[ஸ்ரீராமானுஜர் (திரைப்படம்)|ஸ்ரீராமானுஜர்]] என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.
* பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு [[ரமண மகரிஷி|ரமண மகரிஷியிடமும்]] [[சித்தர் குழந்தைசாமி|சித்தர் குழந்தைசாமியிடமும்]] அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் பொருத்தமானதென்று உபதேசித்திருக்கிறார்கள்.
 
==சிந்தனைச் சிதறல்கள்==
* "எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
 
* "எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல..."
 
==பிற கவிஞர்களின் கருத்துக்கள்==
வரிசை 36:
==வெளி இணைப்புகள்==
* ந.பிச்சமூர்த்தி எழுதிய [http://tamil.sify.com/amudhasurabi/fullstory.php?id=13974862 விஜயதசமி என்ற சிறுகதை] ([http://www.chennaionline.com/festivalsnreligion/Festivals/navarathri/vijayadasami.asp அதன் ஆங்கில மொழியாக்கம்]).
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ந._பிச்சமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது