சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[படிமம்: Suradha.jpg|thumb|100px|கவிஞர் சுரதா]]
'''சுரதா''' ([[நவம்பர் 23]], [[1921]] - [[ஜூன் 19]], [[2006]]) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். புரட்சிக் கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்தினதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை ''உவமைக் கவிஞர்'' என்று சிறப்பித்துக் கூறுவர்.
 
வரிசை 26:
 
பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா அவர்கள் பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
 
 
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சுரதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது