விஷ்ணு சஹஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Kurukshetra.jpg|thumb|300px|குருக்ஷேத்திரப் போரை விளக்கும் படம்]]'''விஷ்ணு சஹஸ்ரநாமம்''' என்று அழைக்கப்படும் பகுதி [[மகாபாரதம்|மகாபாரத]]த்தில் [[ பீஷ்மர் |பீஷ்ம]] பிதாமகர் [[யுதிஷ்டிரர் |யுதிஷ்டிரருக்கு]] போர்க்களத்தில் போதித்த ஆயிரம் திருமாலின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம். மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயம். 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்புவகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது.
 
==இயற்றியவர் வியாசர்==
 
மகாபாரதம், மற்றும் 18 [[புராணங்கள்]], 18 [[உபபுராணங்கள்]] இவற்றையெல்லாம் இயற்றிய [[வியாசர் |வியாசருக்கு]] இந்து மதம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய ஒவ்வொரு நூலிலும் பல அரிய பெரிய தோத்திரங்களை அடக்கியுள்ளார். அப்படித்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமாக அடங்கியுள்ளது.
 
==தொகுத்து உரைத்தவர் பீஷ்மர்==
[[File:Vishnu sahasranama manuscript, c1690.jpg|thumb|right|200px|விஷ்ணு சகஸ்ரநாம ஓலைச்சுவடி, கிபி 1690]]
இது [[சத்வகுணம்]] நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட
சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் [[பாகவதம்]] <ref> ஶ்ரீமத் பாகவதம்: VI - 3- 20,21 </ref> அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரை பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.
 
==தோற்றுவாய்==
வரிசை 21:
# எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்?
 
இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை '''தியானித்தும், துதித்தும், வணங்கியும்'''<ref> ''த்யாயன் ஸ்துவன் நமஸ்யம்ஶ்ச'' - விஷ்ணு ஸஹஸ்ரநாமம். முன்னொட்டு சுலோகங்கள் </ref> ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவது; அவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவது; சிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.
 
==ஒரு மேல்நோக்கு==
வரிசை 29:
==உரையாசிரியர்கள்==
 
வியாசரும் பீஷ்மருமே உரையாசிரியர்கள் தாம். ஏனென்றால் மந்திரசக்திமிக்க நாமங்களை ரிஷிகள் கண்டுபிடித்தனர். அவற்றில் பலவற்றை வியாசர் மகாபாரதத்தில் பல நிகழ்ச்சிகளில் எடுத்து விளக்கியுள்ளார். அவற்றை வரிசைப் படுத்தித் தொகுத்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து பீஷ்மர் தொகுத்ததில் பல அழகிய கருத்துகள் உருவாகின்றன.முதன்முதல் பாஷ்யம் என்று பெயரிட்டு உரை எழுதியவர் [[ஆதி சங்கரர்]]. இவர் எழுதிய உரையின் சிறப்பிற்கு சான்றாக மகாபாரதத்திற்கு உரை எழுதிய [[நீலகண்டர்]] விஷ்ணுசஹஸ்ரநாமப்பகுதிக்கு வந்ததும், நாமங்களின் பொருள் ஶ்ரீசங்கரரின் பாஷ்யத்திலிருந்தே அறியத்தகுந்தது என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளதைச் சொல்லவேண்டும்.[[விசிஷ்டாத்வைத]] வேதாந்த முறையின் வழிவந்த [[பராசர பட்டர் |பராசரபட்டரின்]] உரை அடுத்தபடி தோன்றியது. மத்வ பரம்பரை வழி வந்த ஶ்ரீ [[சத்யஸந்த யதி]] ஓர் உரை எழுதியுள்ளார். இம்மூண்று உரைகளைத்தழுவி, பின் நூற்றாண்டுகளில் இன்றுவரை பலர் உரைகள் எழுதியுள்ளனர்.இவர்களில் சிலர்:
 
* விஷ்ணுவல்லபர்
வரிசை 50:
பரம்பொருள் பால்பிரிவினைக்குட்படாதாகையால் அஃறிணையாகவே குறிப்பிடப்பெறும். இதனாலேயே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் நாமமே அஃறிணைச்சொல்லான விஶ்வமாக இருக்கிறது.
 
விசுவம் என்ற சொல்லே 'விஶ்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து முளைத்த சொல். 'விஶ்' என்ற வினைச்சொல்லிற்கு 'நுழை' என்று பொருள். உலகைப்படைத்து அதில் 'அனுப்ரவேசம்' செய்தார் என்று பரம்பொருளைப் பற்றி [[உபநிடதங்கள்]] சொல்கின்றன <ref> தைத்திரீயோபநிடதம், 2-வது அத்தியாயம், 6-வது அனுவாகம்</ref> இதற்கு உரை எழுதும் ஆதி சங்கரர் <ref>Complete works of Sri Sankaracharya (in the original Sanskrit) Vol.VIII.Samata Books, Madras, 1983. pp.699-704 </ref> பரம்பொருள் உலகத்திலுள்ள ஒவ்வொன்றிலும் உள்ளுறைபவனாக ('அந்தர்யாமி'யாக) இருக்கின்றான் என்பதே இதன் பொருள் என்று தீர்மானம் செய்கிறார். இப்படி ஆண்டவன் அவன் படைத்த உலகிற்குள் உள்ளுறைபவனாகிறான் என்ற பொருளில் அவன் உலகிற்குள் நுழைந்தான் என்று பொருள் தருவதுபோல் பேசுகிறது வேதம். விஶ்வம் என்ற சொல்லின் தத்துவப் பொருளும் இதுவே.
 
இந்துமதத்தின் [[கடவுள்]] தத்துவத்தில் இரண்டு தத்துவங்கள் பிணைந்துள்ளன. அவன் எல்லாவற்றிலும் உள்ளுறைபவனாக இருக்கின்றான் என்பது ஒன்று.அவன் எல்லாவற்றையும் கடந்து இருக்கிறான் என்பது மற்றொன்று. விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் முதற்பெயரான விசுவம் அவன் உள்ளுறைவதை சுட்டிக்காட்டுகிறது.
வரிசை 56:
==விஷ்ணு==
 
எல்லாமானவர் என்பதை முதற்பெயரால் சொல்லி, எல்லாவற்றையும் கடந்து இருக்கிறார் என்ற இரண்டாவது தத்துவத்தை சுட்டிக்காட்டும் சொல்லான 'விஷ்ணு'வை இரண்டாவது பெயராகச் சொல்கிறார் பீஷ்மர். இச்சொல் 'படர்ந்து பரவுதல்' என்று பொருள் தரும் சொல். எல்லாவற்றையும் பரவுதலோடு மட்டுமல்லாமல், '[[புருஷஸூக்தம்]]' என்ற வேதப்பகுதியில் சொல்லியதுபோல் <ref> தைத்திரீய ஆரண்யகம்,மூன்றாவது அத்தியாயம், 12-வது அனுவாகம், 3,4-வது வாக்கியங்கள் </ref> எல்லாவற்றையும் பரவி அவைகளைத் தாண்டியும் இருக்கிறான். அதாவது உலகு என்று பொருள் படும் விஶ்வத்தைத் தாண்டி அப்பாலும் உள்ளவன் அவன் என்பதால் அவனுக்கு 'விஷ்ணு' என்று பெயர். இடம், காலம், பொருள் இவற்றால் அடங்காமல் நிற்பதைச் சொல்கிறது 'விஷ்' என்ற வினை.விஶ்வத்தின் உள்ளும் புறமும் நீக்கமற வியாபித்திருப்பதால் அவன் 'விஷ்ணு' வாகிறான்.
 
'கடவுள்' என்ற சொல்லிலுள்ள 'கட' என்ற பகுதி அவர் எல்லாவற்றையும் கடந்துமிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. இது 'விஷ்ணு' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கடவுள் என்ற சொல்லிலுள்ள இராண்டாவது பகுதி 'உள்'; அவன் கடந்து மட்டுமில்லை, உள்ளேயும் இருக்கிறான் என்ற 'உள்ளுறைதல்' தத்துவத்தைச் சொல்வதால், இது 'விஶ்வம்' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.
வரிசை 95:
==பலமுறைவரும் பெயர்கள்==
 
::குறிப்பு: பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட எண்கள் ஸஹஸ்ரநாமத்தில் அப்பெயர் வரும் தொடரெண்களைக் குறிக்கிறது.
 
===நான்கு முறை வரும் 2 பெயர்கள்===
வரிசை 116:
 
===இரண்டு முறை வரும் 75 பெயர்கள்===
 
==பீஷ்மர் வரிசையமைத்த பாங்கு==
மந்திர சக்தி மிக்க கடவுளின் நாமங்களை வரிசைப்படுத்தித் தொகுத்து யுதிஷ்டிரர் மூலம் உலகுக்களித்தவர் பீஷ்மர். உதிரி உதிரியாகச் சொல்லிலும் பொருளிலும் அமைந்தவற்றை ஒன்றோடொன்று பிணைந்து இருக்கும்படித் தொகுக்கப்பட்டிருக்கும் வரிசையமைப்பினால் தனி நாமம் கூறும் பொருளைத் தவிர அந்நாமம் வரிசையில் அமைந்த இடம் புதிய மற்றொரு கருத்தைப் பறை சாற்றுகிறது. நான்கு எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்:
வரி 155 ⟶ 154:
''அணு:'' - அணுவானவர்; ''பிருஹத்'' - பெரிதானவர்; ''கிருஶ:'' - மெலிதானவர்; ''ஸ்தூல:'' -பருத்தவர்; ''குணபிருத்'' - குணங்களைத் தாங்கி நிற்பவர்; ''நிர்குண: - குணமற்றவர்'' ; ''மஹான்'' -மிகப்பெரியவர்; ''அத்ருத:'' - தாங்கப்பெறாதவர்.
 
இவ்வெட்டு நாமங்களில் முதல் ஆறு நாமங்களிலுள்ள எதிர்மாற்றுப் பொருட்களைப் பற்றி [[விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள் | இங்கே]] பார்க்கவும். இவ்வெட்டு நாமங்களையும் ஒன்று சேரப் பார்க்கும்போது, பராசர பட்டரின் உரையிலிருந்து நமக்கு ஓர் அருமையான பொருள் கிடைக்கிறது. பீஷ்மர் இவைகளை இந்த வரிசையில் தொகுத்ததின் உட்பொருளும் விளங்குகிறது. [[யோகசூத்திரம் |யோகசூத்திரத்தின்]] மூல ஆசிரியர் [[பதஞ்சலி]] எட்டு யோகசித்திகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவையாவன: ,
::''அணிமா'', அதாவது, உடலை அணுவளவு சிறிதாக ஆக்கிக்கொள்ளும் ஆற்றல்;
::''மஹிமா'', அ-து, உடலை பிரம்மாண்டமான அளவிற்கு பெரிதாக ஆக்கிக் கொள்வது;
வரி 169 ⟶ 168:
==பன்னிரு நாமங்கள்==
 
விஷ்ணுவின் பன்னிரு பெயர்களாவன: [[கேசவன் என்ற பெயர்ச் சொற்பொருள் | கேசவன்]], [[நாராயணன் என்ற சொற்பொருள் | நாராயணன்]], [[மாதவன் என்ற சொற்பொருள் | மாதவன்]], [[கோவிந்தன் என்ற சொற்பொருள் |கோவிந்தன்]], விஷ்ணு, [[மதுசூதனன் என்ற சொற்பொருள் |மதுசூதனன்]], திரிவிக்ரமன், வாமனன், [[ஸ்ரீதரன் என்ற சொற்பொருள் |ஸ்ரீதரன்]], [[ருஷீகேசன் என்ற சொற்பொருள் |ருஷீகேசன்]] ,[[பத்மநாபன் என்ற சொற்பொருள் |பத்மநாபன்]], [[தாமோதரன் என்ற சொற்பொருள் | தாமோதரன்]].
 
இப்பன்னிரு பெயர்களும் இந்து சமூகத்திலும் அதன் சமயத்திலும் மீறத்தகாத உயர்நிலையுடையவை. அதே காரணத்தினால் தான், விஷ்ணுவை முக்கிய தெய்வமாகக் கொண்ட [[வைணவம் |வைணவத்தில்]], மரபு வழுவாதவர்கள் தங்கள் உடலின் 12 பாகங்களில் 12 குறிகள் இட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு குறியும் இப்பன்னிருவரில் ஒருவரின் 'நாமத்தைக்' (=பெயரை)குறிக்கும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக மரபில் ஒன்றிவிட்டதால், இன்று அக்குறிகளுக்கே 'நாமங்கள்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.
 
இதனில் சுவையான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான இராமர், கிருஷ்ணர்
வரி 181 ⟶ 180:
 
==தாரகநாமங்கள்==
 
==இலட்ச அர்ச்சனை மூலம் வழிபாடு==
 
வரி 214 ⟶ 212:
==மேற்கோள்கள்==
<References/>
[[பகுப்பு:மகாபாரதம்]]
 
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:இந்து சமய நூல்கள்]]
 
[[en: Vishnu sahasranama]]
[[gu:વિષ્ણુ સહસ્રનામ]]
[[it:Viṣṇusahasranāma]]
வரி 223 ⟶ 222:
[[ru:Вишну-сахасранама]]
[[te:విష్ణు సహస్రనామ స్తోత్రము]]
[[en: Vishnu sahasranama]]
"https://ta.wikipedia.org/wiki/விஷ்ணு_சஹஸ்ரநாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது