சனத்குமாரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
==சாந்தோக்ய உபநிடதத்தில்==
 
[[சாந்தோக்ய உபநிடதம் |சாந்தோக்ய உபநிடதத்தில்]] நாரதருக்கும் சனத்குமாரருக்கும் ஒரு நீண்ட உரையாடல் அதன் ஏழாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. அது பூமா வித்தை என்ற [[வேதாந்தம் |வேதாந்தக்]] கருத்து. அல்பமான பொருளில் சுகம் கிடையாது; அநந்தமான பரம்பொருளில் தான் சுகம் என்பதை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசிக்கிறார்.
 
==மகாபாரதத்தில்==
 
குருக்ஷேத்திரப்போர் தொடங்குவதற்கு முன் பேரரசன் திருதராஷ்டிரனுக்கு அவர் உடன்பிறந்த விதுரர் பல நீதிகளை எடுத்துரைக்கும் ஓரிரவு. (இந்த நீதிகள் அடங்கியதுதான் '[[விதுர நீதி]]' என்று புகழ் பெற்ற நூல்). அதில் 'சாகாநிலை' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் விதுரர். திருதராஷ்டிரருக்கு தன் 100 புத்திரர்களும் போரில் சாகாநிலையை அடையவேண்டும் என்ற அவா. இதனால் தூண்டப்பட்டு தனக்கு 'சாகாநிலை'யைப் பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்துகிறார். விதுரர் தன் யோகசக்தியினால் தேவலோகத்திலிருந்த சனத்குமாரரை உடனே அழைக்க அவர் திருதராஷ்டிரரின் கேள்விகளுக்கெல்லாம் விவரமாக பதில் சொல்லுகிறார். இது [[மகாபாரதம் |மகாபாரதத்தின்]] உத்தியோகபர்வத்தில் ஒரு மூன்று அத்தியாயமாக விவரிக்கப்படுகிறது. இம்மூன்று அத்தியாயங்களுக்கு '[[சனத்சுஜாதீயம்]]' என்று பெயர். வேதாந்ததத்துவங்கள் வெகு எளிமையாக விளக்கப்பட்டிருக்கும் நூல்.
 
[[பகுப்பு: இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/சனத்குமாரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது