ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சந்திரபாபு''' (J.P.Chandrababu) ([[ஆகத்து 4]], [[1927]] - [[மார்ச் 7]], [[1974]]) [[தமிழ்]]த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.
 
==இளமைப் பருவம்==
சந்திரபாபு [[தூத்துக்குடி]]யில் [[கிருத்தவம்|கிருத்துவ]]க் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.
 
வரிசை 10:
ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: "உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்."
 
==திரையுலக வரலாறு==
 
[[1937]]ஆம் ஆண்டு [[அமராவதி]] என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். [[1950கள்|1950களில்]] பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த [[எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]] என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
 
வரி 19 ⟶ 20:
தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு
 
==சொந்த வாழ்க்கை==
நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் [[அந்த 7 நாட்கள்]] படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் [[பாக்கியராஜ்]] கூறினார்.)
 
வரி 59 ⟶ 60:
* பம்பரக் கண்ணாலே காதல்
 
==சுவையான தகவல்கள்==
* [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்|எஸ். ராதாகிருஷ்ணன்]] இந்தியக் குடியரசு தலைவராக இருக்கையில் அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்த் திரைக் கலைஞர்கள் குழுவில் பங்கேற்றிருந்த சந்திரபாபு "பிறக்கும்போதும் அழுகின்றான்" என்ற தமது பாடலைப் பாடிக் காட்டினார். அதை வெகுவாகப் பாராட்டிய குடியரசுத் தலைவரின் மடிமீது பாய்ந்து அமர்ந்து, அவரது கன்னத்தை வருடி "நீ ரசிகன்" என்றார் சந்திரபாபு! சுற்றியிருந்தவர்கள் பதறினும், குடியரசுத் தலைவர் கோபிக்காது சிரித்தார்.
 
வரி 68 ⟶ 69:
* [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரை]] வைத்து "மாடி வீட்டு ஏழை" என்னும் திரைப்படத்தை இயக்க சந்திரபாபு முயன்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்புடன் இது முடிவுற்றது. இந்த முயற்சியின் தோல்விக்கு இரு தரப்பினரையுமே இன்று வரை காரணமாகச் சொல்வதும் தொடர்கிறது.
 
=ஜே.பி.சந்திரபாபு =பாடி நடித்த பாடல்கள் ==
 
*ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
வரி 103 ⟶ 104:
 
 
==புற இணைப்புகள்==
* [http://www.raaga.com/channels/tamil/movie/T0000548.html ராகா வலைத்தளத்தில் சந்திரபாபுவின் பிரபல திரையிசைப் பாடல்கள்]
* [http://www.dishant.com/album/chandrababu-hits.html திஷாந்த் வலைத்தளத்தில் சந்திரபாபுவின் பிரபல திரையிசைப் பாடல்கள்]
வரி 111 ⟶ 112:
* [http://www.vikatan.com/av/2010/jun/09062010/digi1av.asp சந்திரபாபுவைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் வெளியான ஒரு கட்டுரை]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது