விஷ்ணு சஹஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 175:
ஆகிய இரு பெயர்கள் இப்பன்னிருவரில் இல்லை. எனினும், திரிவிக்ரமன், வாமனன் என்ற இரு பெயர்களைத் தவிர இதர 10 பெயர்களும் கிருஷ்ணருடையது தான்.
 
இப்பன்னிரு பெயர்களில் நேரடியாக விஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்வது 'திரிவிக்ரமன்', 'வாமனன்' என்ற இரு பெயர்கள்தாம். வாமன அவதாரத்தில் ஒரு சிறிய உருவத்துடன் மகாபலிப்பேரரசரின் முன் வந்து, மூன்றடி மண் கேட்டு அதற்கு அரசன் உடன்பட்டவுடன் வானளாவிய கால்களினால் மூவுலகத்தையும் அளந்தார் விஷ்ணு. இதனால் அவருக்கு திரிவிக்ரமன் என்ற பெயர் வந்தது. 'திரி' என்றால் 'மூன்று'. 'விக்ரம' என்றால் 'காலின் ஓரடி'. 'வாமன' என்றால் 'சிறிய உருவம்'. குள்ளமான உடலமைப்பு கொண்டபடியால் 'வாமனர்' என்ற பெயர். உலகளந்த பெருமானாதலால் 'திரிவிக்ரமர்'.
 
மற்ற பெயர்களின் சொற்பொருளைப் பற்றி அப்பெயர்களிலுள்ள தனிக்கட்டுரைகளைப் பார்க்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/விஷ்ணு_சஹஸ்ரநாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது