51,759
தொகுப்புகள்
'''ஆசிரியர்''' எனப்படுபவர் மற்றவர்களுக்கு [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடமொன்றில்]] [[கல்வி]] கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் '''தனிப்பயிற்சியாளர்''' என அழைக்கப்படுகிறார். ஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணி ஆற்ற ஓர் [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ்]] பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின்னர் [[கல்வியியல்|கல்வியியலில்]] கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் கலை,சமய நூல்கள், குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர்.
[[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு,ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
|