ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: io:Kosmala teleskopo „Hubble“
வரிசை 54:
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர், போர்க் காலத்தில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை அறிவியலாளர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட வானியல் சிறிய அளவில் தொடங்கியது. சூரியனின் முதலாவது புற ஊதாக் கதிர் [[நிறமாலை]] 1946 ஆம் ஆண்டில் பெறப்பட்டது. 1962 இல், [[ஐக்கிய இராச்சியம்]], புவியைச் சுற்றும் சூரியத் தொலை நோக்கி ஒன்றை ஏவியது. 1966 இல் நாசா தனது முதலாவது [[புவியைச் சுற்றும் வானியல் அவதான நிலையம்|புவியைச் சுற்றும் வானியல் அவதான நிலையத்தை]] (ஓஏஓ) ஏவியது. ஓஏஓ-1 இன் மின்கலங்கள் பழுதானதால் திட்டம் மூன்று நாட்களிலேயே நின்றுபோனது. தொடர்ந்தி 1968 ஆம் ஆண்டில் ஓஏஓ-2 ஏவப்பட்டது. இது, புற ஊதாக் கதிர்கள் மூலம் [[விண்மீன்]]களையும், விண்மீன் கூட்டங்களையும் அவதானித்தது. ஒரு ஆண்டுக்கு மட்டுமே இது திட்டமிடப்பட்டது ஆயினும், அதனையும் தாண்டி 1972 ஆம் ஆண்டு வரை இது செயல்பட்டது.
 
வானியலில், விண்வெளியிலிருந்தான அவதானிப்பு வகிக்கக்கூடிய முக்கிய பங்கு குறித்து ஓஏஓ திட்டங்கள் நன்கு விளக்கின. தொடர்ந்து, 1968 ஆம் ஆண்டில், 3 மீட்டர் விட்டம் கொண்ட ஆடியுடன் கூடிய [[தெறிப்புத் தொலைநோக்கி]] ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமொன்றை நாசா தொடங்கியது. 1979 ஆம் ஆண்டில் செலுத்தப்படுவதற்காகத் திட்டமிடப்பட்ட இதற்கு பெரிய சுற்றும் தொலைநோக்கி அல்லது பெரிய விண்வெளித் தொலைநோக்கி (எல்எஸ்டி) எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டது. இத்தகைய செலவு கூடிய திட்டங்கள் நீண்டகாலம் பயன்பட வேண்டுமாயின், திருத்தப் பயணத் திட்டங்கள் தேவை என உணரப்பட்டது. அத்துடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய [[விண்வெளி ஓடம்|விண்வெளி ஓடங்களை]] உருவாக்குவதற்கான திட்டங்களும், இத்தகைய திருத்தப் பயணத் திட்டங்களுக்கான தொழில்நுட்பங்கள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறித்துக் காட்டின.
 
== நிதி தேடல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹபிள்_விண்வெளித்_தொலைநோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது