"கல்பகாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,793 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
==இன்றைய மன்வந்தரம்==
 
இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இதனுள் மூன்று யுகங்கள் -- அதாவது, கிருதயுகம், திரேதாயுகம், துவபரயுகம் -- சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது கலியுகம். இதனுள் கி.பி.2011க்குச்சரியான கலியுக ஆண்டு 5112-13.
 
==இன்றைய கல்பம்==
 
இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது.
 
==மற்ற சில கல்பங்கள்==
 
பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள். அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன. இப்பொழுது முதல் பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தின் முதல் கல்பம் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்குமுன் முடிந்து போன முதல் பரார்த்தத்தின் கடைசி நாள் 'பாத்ம' கல்பம் எனப்படும். முதல் பரார்த்தத்தின் முதல் நாள் 'பிராம்ம' கல்பம் எனப்படும். இவையிரண்டு கல்பத்தைப் பற்றியும் புராணங்களில் சில சம்பவங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
 
'பரார்த்தம்' என்ற சொல் கணிதத்தில் 10<sup>17</sup> என்ற எண்ணைக் குறிக்கும். பிரம்மாவின் ஆயுட்காலத்தின் பாதியிலும் ஏறக்குறைய அத்தனை மனித ஆண்டுகளே எனப் புராணங்கள் கொள்கின்றன.ஆனாலும் கணக்கிட்டுப் பார்க்கும்போது இதில் வேறுபாடு தெரிகின்றது.
 
:ஒரு மகாயுகம் = 432 x 10<sup>4</sup> மனித ஆண்டுகள்.
:ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 10<sup>7</sup> மனித ஆண்டுகள்.
:ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 10<sup>7</sup> மனித ஆண்டுகள்
:இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x10<sup>7</sup> மனித ஆண்டுகள்
:இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 10<sup>7</sup> .
இது ஏறக்குறைய 10<sup>14</sup> x 1.5 மனித ஆண்டுகளாகின்றது. இது கணிதப்படி [[வடமொழியில் பத்தின் அடுக்குகள் | பரார்த்தம்]] ஆகாவிட்டாலும் இதையே பிரம்மனின் பரார்த்தம் என்று புராணங்கள் சொல்கின்றன.
 
 
 
 
 
==ஆதாரம்==
புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது ஓர் ஆதாரம். காலகதியின் ஒவ்வொரு அளவிற்குமுள்ள முடிவான ஆதாரம் அக்காலத்தில் வசித்தவர்களின் வாக்குமூலமே. இந்தியாவில் தொன்றுதொட்டு நடந்துவந்த மணம் முதலிய அத்தனை சுபகாரியங்களிலும், ஈமக்கிரியைகள் முதலிய அத்தனை அமங்கலச்சடங்குகளிலும் அன்றுள்ள நேரம் காலம் முதலிய கணக்கீடுகளைச் சொல்லாமல் ஒரு செயலும் நடந்ததில்லை என்பதால் சென்றகாலத்துக் கணக்கீடுகள் பஞ்சாங்கங்கள் என்று புழங்கப்படும் ஏடுகளில் குறிக்கப்பட்டு வருகின்றன எனக் கொள்ளலாம்.
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/873972" இருந்து மீள்விக்கப்பட்டது