யோவான் (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
== புனிதரின் வாழ்வு ==
புனித யோவான் கலிலேயாவைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் செபதேயு. இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான பெரிய யாக்கோபு இவரது சகோதரர் ஆவார்.<ref>[http://www.newadvent.org/cathen/08492a.htm St. John the Evangelist] New Advent.</ref> இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த யோவான், அவரது வழிகாட்டுதலின்படி இயேசுவைப் பின்பற்றினார். இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இவரை ஏற்றுக்கொண்டார். இயேசு யோவானையும் அவர் சகோதரர் யாக்கோபையும் 'இடியின் மக்கள்' என்று அழைத்தார். திருத்தூதர்களிலேயே மிகவும் இளையவராக யோவான் இருந்தார். எனவே, இயேசு இவரை மிகவும் அன்பு செய்தார். இயேசுவின் உருமாற்றம்{{Bibleref2c|Mt.|17:1}} உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் உடனிருந்த மூன்று திருத்தூதர்களுள் யோவானும் ஒருவர். இறுதி இரவுணவின்போது, இவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்ததாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இயேசு திருப்பாடுகளின்போது, இவர் தைரியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். அதன் விளைவாக, தனது தாய் [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வைப் பாதுகாக்கும் பொறுப்பை இயேசு யோவானிடம் அளித்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர் பேதுருவோடு இணைந்து சிறிது காலம் [[எருசலேம்|எருசலேமில்]] நற்செய்தி அறிவித்த யோவான், மரியாவின் விண்ணேற்புக்கு பின்னர் [[எபேசு]] நகருக்கு சென்று போதித்தார் என்று நம்பப்படுகிறது. ரோமப் பேரரசன் தொமீசியன் காலத்தில், இவர் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்டும் எத்தீங்கும் இன்றி உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்ட யோவான் அங்கேயே மரணம் அடைந்தார். யோவானின் திருப்பண்டங்கள் எதுவும் கிடைக்காததால், இவரும் உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யோவான்_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது