தொலைத்தொடர்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தொலைத் தொடர்பு''' என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, இருவழித் தொடர்பு உட்படக், கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத் தொடர்பு என்றபதம், [[வானொலி]], [[தந்தி]], [[தொலைபேசி]], [[தொலைக்காட்சி]], தரவுத் தொடர்பு, [[கணினி வலையமைப்பு]] போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது.
 
தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, [[பரப்பி]], ஒரு ஊடகம் (கம்பி) மற்றும் ஒரு [[சனல்]] மற்றும் ஒரு [[வாங்கி]] என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, "சமிக்ஞை" எனப்படும் பௌதீகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியொன்றாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதீக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சமிக்ஞைகளில் மாற்றத்தையோ அல்லது தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றன. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சமிக்ஞைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய [[கண்]]ணாகவோ அல்லது [[காது|காதா]]கவோ இருக்கக்கூடும். (வேறு சில சந்தர்ப்பங்களில் கண், [[காது]] தவிர்ந்த ஏனைய புலன்கள்கூட இப்பணியைச் செய்கின்றன). இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் [[மூளை]]யிலேயே நடைபெறுகின்றது.
 
தொலைத்தொடர்பு, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு அல்லது கடைசியாகக் குறிப்பிடப்பட்டதன் ஒரு வேறுபாடான, பரப்பியிலிருந்து வாங்கிக்கு ஒரு வழியாக மட்டும் செல்லும், [[ஒலிபரப்பு|ஒலிபரப்பாக]] இருக்கக்கூடும்.
 
[[தொலைத்தொடர்புப் பொறியாளர்]] ஒருவருடைய திறமை, [[பரப்பும் ஊடகம்|பரப்பும் ஊடக]]த்தினுடைய பௌதீக இயல்புகளையும் தகவல்களின் புள்ளிவிபர இயல்புகளையும் பகுத்தாய்ந்து பொருத்தமான குறியீடாக்கும் (encoding), குறியீடவிழ்க்கும் (decoding) பொறிமுறைகளை [[வடிவமைப்பு|வடிவமைப்ப]]திலேயே தங்கியுள்ளது.
 
மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் [[பார்வை]] மற்றும் [[கேள்வி]]ப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, [[மனித உணர்தன்மை]] தொடர்பான [[உடலியல்]] மற்றும் [[உளவியல்]] அம்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது பொருளியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவதால், பொறியாளர்கள், மக்களுடைய பார்க்கும், கேட்கும் அநுபவங்களில் அதிக பாதிப்பை உண்டாக்காமல் எந்த அளவுக்குச் சமிக்ஞைக் குறைபாடுகளைப் பொறுத்துக்கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள்.
 
==மனிதத் (தொலைத்)தொடர்பு - உதாரணம்==
எளிமையான உதாரணமாக, உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையிலான உரையாடலொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் [[மூளை]]யில் உருவாகும், நீங்கள் உங்கள் நண்பருக்குச் சொல்லவிரும்பும் வசனமே, [[தகவல்|தகவலா]]கும். மூலையிலுள்ள மொழி தொடர்பான பகுதிகள், [[motor cortex]], [[குரல் நாண்கள்]], [[larynx]] மற்றும் [[பேச்சு]] எனப்படும் [[ஒலி]]களை எழுப்பும் உங்கள் [[வாய்]] என்பனவே [[பரப்பி]] (transmitter) ஆகும். [[பேச்சு]] எனப்படும் ஒலியலைகளே சமிக்ஞைகள். இவ்வாறான ஒலியலைகளையும், [[எதிரொலி]], [[பகைப்புலச் சத்தங்கள்]] (ambient noise), [[தெறிப்பலைகள்]] (reverberation) என்பவற்றைக் காவிச்செல்லும் காற்றே [[சனல்]] ஆகும். உங்களுக்கும், [[வாங்கி]]யாகிய உங்கள் நண்பருக்குமிடையில், சமிக்ஞைகளில் திரிபுகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஏற்படுத்தாத வேறு தொழில்நுட்பக் கருவிகளும் (உம்: [[தொலைபேசி]], [[அமெச்சூர் வானொலி]] முதலியன) இருக்கக்கூடும். உங்கள் நண்பருடைய காது, [[கேள்வி நரம்பு]], உங்கள் குரலுக்கும் அருகேசெல்லும் வாகனத்தின் சத்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு உங்கள் பேச்சை நீங்கள் சொல்லவிரும்பிய அதே வசனமாக மாற்றக்கூடிய அவருடைய மூளையின் மொழிப்பகுதிகள் என்பனவே இறுதியான [[வாங்கி]]யாகச் செயல்படுகின்றன.
 
அருகே செல்லும் வாகனத்தின் சத்தம், [[சனல்|சனலின்]] முக்கிய இயல்புகளிலொன்றான ''noise'' என்பதற்கு உதாரணமாகும். சனலின் இன்னொரு முக்கியமான அம்சம் [[bandwidth]] என்பதாகும்.
 
==ஏனைய பின்னணிகள்==
பெல் சோதனைச் சாலையைச் சேர்ந்த விஞ்ஞானி [[குளோட் ஈ ஷனோன்]] என்பவர், [[1948]]ல், ''[[தொடர்பின் கணிதவியற் கோட்பாடு]]'' (A Mathematical Theory of Communication) என்பதி வெளியிட்டார். இந்த முக்கியத்துவம்வாய்ந்த வெளியீடு, [[தகவற் கோட்பாடு]] என வழங்கப்படும் தொடர்பு முறைமைகளை விபரிப்பதற்குப் பயன்படும் கணித மாதிரியுருக்களை உருவாக்க விழைந்தது.
 
==எடுத்துக்காட்டுகள்==
டிஜிட்டல் [[சனல் coding]] முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
* [[Hamming coding]],
* [[Gray coding]],
* [[இருமக் coding]],
* [[Turbo coding]].
 
தொலைத்தொடர்பு முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
* [[Semaphore (communication)|Semaphore]]
* [[தந்தி]]
* [[Radioteletype]]
* [[PSTN|உலகத் தொலைபேசி வலையகம்]] (பொது Switched தொலைபேசி வலையகம் அல்லது PSTN எனவும் அழைக்கப்படுவதுண்டு)
* [[வானொலி]]
* [[தொலைக்காட்சி]]
* [[தொலைத்தொடர்புச் செய்மதி]]கள்
* [[Ethernet]]
* [[இணயம்]]
 
 
==பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.ericsson.com/support/telecom Ericsson's ''Understanding Telecommunications'']
 
 
[[en:Telecommunication]]
[[bg:Телекомуникации]]
[[da:Telekommunikation]]
[[de:Telekommunikation]]
[[es:Telecomunicación]]
[[fr:Télécommunications]]
[[it:Telecomunicazioni]]
[[nl:Telecommunicatie]]
[[pt:Telecomunicação]]
[[zh:电信]]
"https://ta.wikipedia.org/wiki/தொலைத்தொடர்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது