"மகனாகிய கடவுள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
'''இறைமகன்''' அல்லது '''மகனாகிய கடவுள்''' என்பவர் அதிபுனித [[திரித்துவம்|திரித்துவத்தின்]] இரண்டாம் ஆள் (நபர்) ஆவார். இறைத்தந்தையால் பிறப்பிக்கப்படும் நித்திய (முடிவில்லாத) வார்த்தையாக இருப்பதால் இவர் '''மகன்''' என்று அழைக்கப்படுகிறார். விண்ணகம், மண்ணகம், நாம் காண்பவை, காணாதவை அனைத்தையும் [[தந்தையாம் கடவுள்|தந்தையாகிய கடவுள்]] இவர் வழியாகவே படைத்தார்; அனைத்தும் இவருக்காகவே படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார். இவர் [[தூய ஆவி]]யாரின் வல்லமையால், கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். இவர் தனது இறைத்தன்மையில் தந்தைக்கு சமமானவர், மனிதத்தன்மையில் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். இவர் அருளும் வாய்மையும் நிறைந்தவராய் நம்மிடையே விளங்கினார். இவர் இறைவனின் அரசை அறிவித்து, அதை மக்களிடையே உருவாக்கினார். இவர் நம்மீது அன்பு செலுத்தியது போன்று, நாமும் ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்துமாறு புதிய கட்டளையைத் தந்தார்.
 
இயேசு கிறிஸ்து, மன எளிமை, சாந்தம், பொறுமையுடன் சகித்தல், நீதியின்பால் தாகம், இரக்கம், இதயத் தூய்மை, சமாதான விருப்பம், நீதியினிமித்தம் துன்பப்படுதல் ஆகிய வழிகளைக் கற்பித்தார். கடவுளின் செம்மறியான இவர், உலகின் பாவங்களை தம்மீது சுமந்து போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் தம்மையே பரிகார பலியாக ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டார். அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்து எழுந்தார். தனது உயிர்ப்பால் நம்மையும் உயிர்ப்பித்து, தனது அருள் வாழ்வில் நமக்கும் பங்கு தந்தார். நாற்பதாம் நாளில் விண்ணகத்திற்கு எழுந்தருளி, தந்தையாகிய இறைவனின்கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். உலகம் முடியும் காலத்தில், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மகிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; இவரது அரசுக்கு முடிவே இராது.<ref>[[நிசேயா நம்பிக்கை அறிக்கை]]</ref>
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/878263" இருந்து மீள்விக்கப்பட்டது