மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 2:
'''மாரிகாலம்''' அல்லது '''மழைக்காலம்''' என்பது ஒரு [[பருவ காலம்]] ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு [[நாடு]], ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி [[மழைவீழ்ச்சி]]யை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது<ref>Glossary of Meteorology (2009). [http://amsglossary.allenpress.com/glossary/search?id=rainy-season1 Rainy season.] American Meteorological Society. Retrieved on 2008-12-27.</ref>. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், [[தகுதிச் சொல்வழக்கு|தகுதிச் சொல்வழக்கின்படி]], இக்காலத்தை '''பசுமைக்காலம்''' என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக [[மரம்]], [[செடி]], [[செடிகொடி|கொடி]]கள், மற்றும் [[பயிர்|பயிர்கள்]] பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்காலமானது, ஒவ்வொரு [[ஆண்டு]]ம், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் [[பருவப் பெயர்ச்சிக் காற்று]] மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும்.
==இலங்கையில் மாரிகாலம்==
[[இலங்கை]]யில் [[இந்தியப் பெருங்கடல்]], மற்றும் [[வங்காள விரிகுடா]]வில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது. [[மே]] நடுப்பகுதியில் இருந்து ஒக்டோபர் வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் [[தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் [[மலை]]ப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், [[தென்மேற்கு]]ப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும்.<br />
ஒக்டோபரில் இருந்து [[நவம்பர்]] வரையான காலம் பருவங்களுக்கு இடையான காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் [[சூறாவளி]]க் காற்று, [[தீவு|தீவின்]] தென்மேற்கு, [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.
"https://ta.wikipedia.org/wiki/மாரிகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது