மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''மாரிகாலம்''' அல்லது '''மழைக்காலம்''' என்பது ஒரு [[பருவ காலம்]] ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு [[நாடு]], ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி [[மழைவீழ்ச்சி]]யை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது<ref>Glossary of Meteorology (2009). [http://amsglossary.allenpress.com/glossary/search?id=rainy-season1 Rainy season.] American Meteorological Society. Retrieved on 2008-12-27.</ref>. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், [[தகுதிச் சொல்வழக்கு|தகுதிச் சொல்வழக்கின்படி]], இக்காலத்தை '''பசுமைக்காலம்''' என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக [[மரம்]], [[செடி]], [[செடிகொடி|கொடி]]கள், மற்றும் [[பயிர்|பயிர்கள்]] பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்காலமானது, ஒவ்வொரு [[ஆண்டு]]ம், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் [[பருவப் பெயர்ச்சிக் காற்று]] மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும்.
==இலங்கையில் மாரிகாலம்<ref>[http://www.mysrilanka.com/travel/theland/rainfall.htm]</ref>==
[[இலங்கை]]யில் [[இந்தியப் பெருங்கடல்]], மற்றும் [[வங்காள விரிகுடா]]வில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது. [[மே]] நடுப்பகுதியில் இருந்து [[ஆகஸ்ட்]]-[[செப்டம்பர்]] வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் [[தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் [[மலை]]ப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், [[தென்மேற்கு]]ப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வரண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் '''கச்சான் காற்று''' என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை. <br />
ஆகஸ்ட்டில்ஆகஸ்ட்-செப்டம்பரில் இருந்து [[நவம்பர்]]-[[ஒக்டோபர்]] வரையான காலம் இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடையான காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் [[சூறாவளி]]க் காற்று, [[தீவு|தீவின்]] தென்மேற்கு, [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.
 
நவம்பர்-[[டிசம்பர்|டிசம்பரில்]] இருந்து [[பெப்ரவரி]]-[[மார்ச்]] வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் [[வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக் காற்று நடுப்பக்தியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை [[வடக்கு]], [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசத்தில் ஏற்படுத்தும்.
 
மீண்டும் பெப்ரவரி-மார்ச்சிலிருந்து மே நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.
 
==இந்தியாவில் மாரிகாலம்==
தென் மேற்கு பருவக்காற்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென் இந்தியா மழை பொழிவை அடையும், ஆனால் தமிழகம் வட கிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பொழிவை பெறும். தென் மேற்கு பருவக்காற்றால் தான் வட இந்தியாவும் அதிக மழை பொழிவை பெறும்.
"https://ta.wikipedia.org/wiki/மாரிகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது