இலங்கை மூதவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

03:31, 25 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கை செனட் சபை (Senate of Ceylon) என்பது இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இந்த அவை சோல்பரி ஆணைக்குழு மூலம் 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபைக் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக 1947, நவம்பர் 12 இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு 1971, அக்டோபர் 2 ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு 1972, மே 22 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இலங்கை செனட் சபை
Senate of Ceylon
வகை
வகைமேலவை
காலக்கோடு
நாடுஇலங்கை
தோற்றம்1947
முன்னிருந்த அமைப்புஇலங்கை அரசாங்க சபை
பின்வந்த அமைப்புஎதுவும் இல்லை
கலைப்பு2 அக்டோபர் 1971
தலைமையும் அமைப்பும்
உறுப்பினர்கள்30
தேர்தல்
தலைமையகம்
கொழும்பு கோட்டையில் உள்ள பழைய சட்டசபை 1947 முதல் 1971 வரை செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இன்று இது குடியரசுக் கட்டடம் என அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ளது.

உசாத்துணைகள்

  • "CEYLON (CONSTITUTION) ORDER IN COUNCIL". LawNet, Government of Sri Lanka.
  • "CEYLON (CONSTITUTION AND INDEPENDENCE) AMENDMENT". LawNet, Government of Sri Lanka.
  • "The Senate Days of Ceylon". The Island, Sri Lanka. 22 April 2010. http://pdfs.island.lk/2010/04/22/p12.pdf. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மூதவை&oldid=882893" இலிருந்து மீள்விக்கப்பட்டது