"இலங்கை மூதவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,088 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
{{Politics of Sri Lanka}}
'''இலங்கை செனட் சபை''' (''Senate of Ceylon'') என்பது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]] ஆகும். இந்த அவை [[சோல்பரி ஆணைக்குழு]] மூலம் [[1947]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [[கொழும்பு]] கோட்டையில் உள்ள பழைய [[இலங்கை சட்டசபை|சட்டசபை]]க் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக [[1947]], [[நவம்பர் 12]] இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு [[1971]], [[அக்டோபர் 2]] ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு [[1972]], [[மே 22]] இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
==வரலாறு==
சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]]யாக செனட் சபை 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[பிரபுக்கள் சபை]]யின் நடைமுறையை ஒத்ததாக இது காணப்பட்டது. 30 உறுப்பினர்கள் இதில் அங்கம் வகித்தனர். இவர்களில் 15 பேர் நாடாளுமன்றத்தின் [[கீழவை]]யான [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]]யாலும், ஏனையோர் இலங்கைப் பிரதமரின் சிபார்சின் படி இலங்கை ஆளுநராலும் நியமிக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் செனட் சபையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பே சட்டமூலமாக்கப்படும்<ref>{{cite web|last=Wickramanayake|first=Prabath|title=Sri Lankan Senate|url=http://www.analystjournal.com/global-a-political-issues/world/236-sri-lankan-senate.html|publisher=Analyst Journal|accessdate=24 June 2011}}</ref>.
 
1970 ஆம் ஆண்டில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் தலைமையிலான [[இடதுசாரி]]க் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, செனட் சபையைக் கலைக்கும் தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தது. [[1971]] [[மே 21]] இத்தீர்மானத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/DA12Df03.html|chapter=Chapter 22: 'Only God Can Save the Tamils' }}</ref>. இதனை அடுத்து செனட் ச்பை தனது கடைசி அமர்வை 1971 செப்டம்பர் 28 இல் நடத்தியது<ref name="Rajasingham2"/>. இலங்கை (அரசியலமைப்பு மற்றும் சுதந்திரம்) திருத்தச் சட்டமூலம் 36, 1971 (''Ceylon (Constitution and Independence) Amendment Act, No. 36 of 1971'') என்ற சட்டமூலத்துக்கு 1971 அக்டோபர் 2 ஆம் நாள் பிரித்தானியாவின் அரச அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, இது சோல்பரி அரசியலமைப்புக்கு எட்டாவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2"/>. 1971 இல் செனட் சபை கலைக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு ஓரங்க நாடாளுமன்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==உசாத்துணைகள்==
1,13,649

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/883142" இருந்து மீள்விக்கப்பட்டது