"இலங்கை மூதவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,558 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==வரலாறு==
சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]]யாக செனட் சபை 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[பிரபுக்கள் சபை]]யின் நடைமுறையை ஒத்ததாக இது காணப்பட்டது. 30 உறுப்பினர்கள் இதில் அங்கம் வகித்தனர். இவர்களில் 15 பேர் நாடாளுமன்றத்தின் [[கீழவை]]யான [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]]யாலும், ஏனையோர் இலங்கைப் பிரதமரின் சிபார்சின் படி இலங்கை ஆளுநராலும் நியமிக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் செனட் சபையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பே சட்டமூலமாக்கப்படும்<ref>{{cite web|last=Wickramanayake|first=Prabath|title=Sri Lankan Senate|url=http://www.analystjournal.com/global-a-political-issues/world/236-sri-lankan-senate.html|publisher=Analyst Journal|accessdate=24 June 2011}}</ref>.
 
1970 ஆம் ஆண்டில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் தலைமையிலான [[இடதுசாரி]]க் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, செனட் சபையைக் கலைக்கும் தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தது. [[1971]] [[மே 21]] இத்தீர்மானத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/DA12Df03.html|chapter=Chapter 22: 'Only God Can Save the Tamils' }}</ref>. இதனை அடுத்து செனட் ச்பை தனது கடைசி அமர்வை 1971 செப்டம்பர் 28 இல் நடத்தியது<ref name="Rajasingham2"/>. இலங்கை (அரசியலமைப்பு மற்றும் சுதந்திரம்) திருத்தச் சட்டமூலம் 36, 1971 (''Ceylon (Constitution and Independence) Amendment Act, No. 36 of 1971'') என்ற சட்டமூலத்துக்கு 1971 அக்டோபர் 2 ஆம் நாள் பிரித்தானியாவின் அரச அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, இது சோல்பரி அரசியலமைப்புக்கு எட்டாவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2"/>. 1971 இல் செனட் சபை கலைக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு ஓரங்க நாடாளுமன்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==உறுப்பினர்கள்==
செனட் சபை 30 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் செனட்டர்கள் என அழைக்கப்பட்டனர். 15 உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களால் விகிதாசார உறுப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு மாற்றத்தக்க வாக்குரிமை இருந்தது<ref name="Rajasingham">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/CJ20Df03.html|chapter=Chapter 11: On the threshold of freedom }}</ref>. ஏனைய 15 பேரையும் பிரதமரின் பரிந்துரையில் [[இலங்கையின் மகா தேசாதிபதி|இலங்கையின் ஆளுனர்]] நியமிப்பார். சமூகத்தில் புகழ் பெற்றவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்<ref name="Rajasingham"/>.
 
செனட் உறுப்பினர்களின் குறைந்த வயதெல்லை 35 ஆக இருந்தது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட மாட்டார்கள். ஆனால், குறைந்தது இரண்டு அரசாங்க அமைச்சர்கள் செனட் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்<ref name="Rajasingham"/>. ஒரு செனட்டரின் வழமையான பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
 
==உசாத்துணைகள்==
1,14,485

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/883229" இருந்து மீள்விக்கப்பட்டது