"இந்து-அரபு எண்ணுருக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (அராபிய எண்ணுருக்கள், இந்து-அரபு எண்ணுருக்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி
'''அராபிய எண்ணுருக்கள்''' அல்லது '''இந்து-அரபு எண்ணுருக்கள்''' (''Hindu–Arabic numeral system'') எனப் பொதுவாக அழைக்கப்படும் எண்ணுருக்களே, எண்களைக் குறிக்க மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் குறியீட்டுமுறை. அராபிய எண்ணுரு முறைமை இடஒழுங்கிலமைந்த, அடி 10 ஐக் கொண்ட ஒரு எண்ணுரு முறைமையாகும். இதில் 10 இலக்கங்களைக் குறிக்க 10 வெவ்வேறான glyphs உள்ளன. வலது கோடியிலமைந்த இலக்கமே ஆகக்கூடிய பெறுமானத்தைக் கொண்டது. அராபிய எண்ணுரு முறைமை ஒரு பதின்மக் குறியையும் (பொதுவாக ஒரு பதின்மப் புள்ளி அல்லது ஒரு பதின்மக் காற்புள்ளி) பயன்படுத்துகின்றது. இது ஒற்றைத் தானத்தையும், பத்திலொன்றாம் தானத்தையும் பிரிக்கின்றது. இதைவிடப் பதின்மத் தானங்கள் திரும்பத் திரும்ப முடிவிலியாகத் தொடர்வதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பயன்படுகின்றது. இவ்வாறாக வளர்ச்சியடைந்த இன்றைய அராபிய எண்ணுரு முறைமை எந்தவொரு rational எண்ணையும், 12 glyph களைப் பயன்படுத்திக், குறியீடாகத் தரவல்லது.
 
அராபிய எண்ணுரு முறைமை பலவகையான glyph தொகுதிகளைப் பயன்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதிகளை இரண்டு முக்கியக் குடும்பங்களாகப் பிரிக்கலாம். ஒன்று மேற்கு அராபிய எண்ணுருக்கள், மற்றது கிழக்கு அராபிய எண்ணுருக்கள். இன்றைய [[ஈராக்]] நாட்டினுள் அடங்கும் பகுதியில், ஆரம்பத்தில் வளர்ச்சி பெற்ற, கிழக்கு அராபிய எண்ணுருக்கள் "அரபு-இந்திக்" என்னும் பெயரில் கீழேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. கிழக்கு அரபு-இந்திக் என்பது, கிழக்கு அராபிய எண்ணுருக்களின் ஒரு வகையாகும். [[ஸ்பெயின்]], மக்ரெப் போன்ற இடங்களில் வளர்ச்சியடைந்த மேற்கு அராபிய எண்ணுருக்கள், படத்தில் "ஐரோப்பிய" என்று காட்டப்பட்டுள்ளன.
1,19,207

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/883667" இருந்து மீள்விக்கப்பட்டது