சார்லி சாப்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
சாப்ளின், [[இலண்டன்|லண்டனில்]] உள்ள [[வால்வோர்த்|வால்வோர்த்தில்]] சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் "[[மியூசிக் ஹால்]]" கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்தே இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் அவர் அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். [[1896]] ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் அநாதைகளுக்கான பள்ளி (Hanwell School for Orphans and Destitute Children) ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில் இவர் தந்தை குடிப் பழக்கத்தினால் உடல் நலம் குன்றி சாப்ளினின் 12-ஆவது வயதில் மரணம் அடைந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த "கேன் ஹில் அசைலம்" (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.பின்பு இவரும் [[1928]] ஆம் ஆண்டில் இறந்தார்.
 
சாப்ளின் 5 வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் [[1894]] ஆம் ஆண்டில்ல்ஆண்டில் மியூசிக் ஹாலில் அவர் தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்தபொழுது சிட்னி [[லண்டன் ஹிப்போட்ரோம்|லண்டன் ஹிப்போட்ரோமில்]] "[[சின்ட்ரெல்லா]]" பாண்டோமைமில் ஒரு பூனையாக (நகைச்சுவைக் கதாப்பாத்திரம்) நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். [[1903]] ஆம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - [[செர்லாக் ஹோம்ஸ்]] நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் [[அக்டோபர் 2]], [[1912]] - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் [[ஸ்டான் லாரல்|ஸ்டான் லாரலாக]] பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர்.
 
== திரையுலக வாழ்க்கை ==
வரிசை 42:
 
== திருமணங்கள் ==
இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. [[அக்டோபர் 23]], [[1918]]-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "[[தி கோல்ட் ரஷ்]]" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். [[நவம்பர் 26]], [[1924]]-இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.{{cn}} மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை [[ஜோன் பேரி]]யுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை; குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார். சில நாட்கள் கழித்து, [[ஐகன் ஓ'நீலி|ஐகன் ஓ'நீலின்]] மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர்.
 
== சாப்ளினின் மரணம் ==
சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. [[மார்ச் 1]], [[1977]] ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். சாப்ளினின் உடல் பதினோறு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் கைப்பற்றப்பட்டது. இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில் அமைக்கப்பட்டது.
 
== விருதுகளும் கௌரவிப்புகளும் ==
சாப்ளின் கௌரவ ஆஸ்கார் விருதினை இருமுறை பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்ட பொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை நிறுவப்படவில்லை. சாப்ளின் "[[தி சர்க்கஸ்]]" திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்கு தேர்வு பெற்றார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், அவருடைய "versatility and genius in acting, writing, directing and producing The Circus"-ஐப் பாராட்டி சிறப்பு விருது அளிக்கப்பட்டது. அதே வருடம், இன்னொரு சிறப்பு விருது,"[[தி ஜாஸ் சிங்கர்]]" படத்திற்காக வழங்கப்பட்டது. இரண்டாவது ஆஸ்கர் 44 ஆண்டுகளுக்குப் பின் 1972 ஆம் ஆண்டில் "சினிமாவை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்கிற்காக" வழங்கப்பட்டது.
 
சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த [[திரைக்கதை|திரைக்கதைக்கான]] விருதிற்காகவும், "தி கிரேட் டிக்டேடர்" திரைப்படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டாலும், விருதுகள் பெறவில்லை. 1972 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை [[கிலயர் ப்லூம்]] நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 1952 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டாலும் மெக்கார்த்திசத்தினால் சாப்ளினுக்கேற்பட்ட பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்சில் வெளிவரவில்லை. 1972 ஆம் ஆண்டிலே தான் விருதிற்கு தேர்வாவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தது. "லைம்லைட்" திரைப்படத்தில் [[பஸ்டர் கீட்டனும்]] நடித்திருந்தனர் - இதுவே இவ்விரு நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம்.
வரிசை 60:
== சாப்ளின் பற்றிய சுவையான செய்திகள்(Trivia) ==
[[படிமம்:Chaplin caricature.JPG|thumb|கேலிச்சித்திரமொன்றில் சார்லி சாப்ளின்]]
* சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுதுபார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
* சாப்ளின் நல்ல [[சதுரங்கம்|சதுரங்க]] ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக் காரர்ஆட்டக்காரர் [[சாமி ரிஷவெஸ்கி]] (Sammy Reshevsky.)-யிடம் பயின்றார்.
* சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல்சாப்ளினைப்போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டுநடத்தப்பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
 
== திரையாக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சார்லி_சாப்ளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது