கிரிகோர் மெண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: uk:Ґреґор Мендель
உள்ளிணைப்புக்கள்
வரிசை 16:
| religion = [[கத்தோலிக்கம்]]
}}
'''கிரிகோர் ஜோஹன் மெண்டல்''' (''Gregor Johann Mendel'', [[ஜூலை 20]], [[1822]] – [[ஜனவரி 6]], [[1884]]), [[மரபியல்]] குறித்த அடிப்படை [[ஆய்வு|ஆராய்ச்சிப்]] பணிகளுக்காக அறியப்படும் [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய நாட்டைச்]] சேர்ந்த [[ஹிப்போவின் அகஸ்டீன்|அகஸ்டீன் சபை]] [[துறவி]]யாவார். இவர், மரபியல் [[அறிவியல்|அறிவியலின்]] தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
 
ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல், தன்னுடைய தோட்டத்தில் இருந்த பட்டாணிச்[[பட்டாணி]]ச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடைபெறச் செய்து, அதன் விளைவுகளை (அதாவது ஆராய்ச்சியின் முடிவுகளை) புள்ளிவிபரவியலின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டார். அதன் பயனாக, மரபுப் பண்புகள் ஒரு [[சந்ததி|சந்ததியில்]] (offspring) இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்று கண்டறிந்து, 1866ல் அது குறித்து ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். இந்த மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கமையவே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன என அவர் கூறினார். அந்த விதிகள் பின்னாளில் '''மென்டலின் விதிகள்''' எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.
 
எனினும், அக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்களால் மெண்டலின் கட்டுரையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள், இன்று [[மரபியல்]] அறிவியலின் அடிப்படையாக விளங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கிரிகோர்_மெண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது