சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சங்கம் என்னும் சொல் புலவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
சங்கம் என்னும் சொல் புலவர் குழுவைக் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் காணப்படவில்லை. பரிபாடலில் சங்கம் என்னும் சொல் ஒரே ஒரு இடத்தில் பயிலப்பட்டுள்ளது. அதுவும் வரம்பில்லாத ஒரு எண்ணைக் குறிக்கிறது. ஆயின் பண்டைத் தமிழகத்தில் புலவர் குழு இல்லையா என்னும் வினா எழும். இருந்தது என்பதே அதற்கான விடை. ‘புணர்கூட்டு’ என்னும் பெயரால் அது குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு அது. இதனையும் சங்கம் என்னும் சொல் தோன்றிய காலத்தையும், அமைபின் பாங்கையும் உணரக்கூடிய வகையில் கிட்டியுள்ள சான்றுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.
==புணர்கூட்டு==
1. # நெடுஞ்செழியன் தன் அவையில் மாங்குடி மருதனாரைத் தலைவராகக் கொண்டு புலவர்கள் பாடியதைக் குறிப்பிடுகிறான் “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர்” பாடல் – பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் -<ref> புறம் 72</ref>
2. # இந்த மாங்குடி மருதனார் இந்த நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது அவனது முன்னோர்களாகிய பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி போலவும், நிலந்தரு திருவின் நெடியோன் போலவும் இனிது வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி நல்லாசிரியர்களைக் கூட்டி அவர்களுக்கு உணவளிக்கும் நல்வேள்வி செய்தவன் என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் என்பவன் நல்லாசிரியர்களைக் கூட்டி ‘புணர்கூட்டு’ அவையை நடத்தினான் எனவும் குறிப்பிடுகிறார்.<ref> “களந்தோறும் கள் அரிப்ப, மரந்தோறும் மை வீழ்ப்ப, நிணவூன் சூட்டு உருக்கு அமைய, நெய் கனிந்து வறை அர்ப்ப, குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின், பரந்து தோன்றா வியன் நகரால், பல்சாலை முதுகுடுமியின், நல்வேள்வித் துறை போகிய, தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல – இனிது உறைமதி பெரும” – மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 753 முதல்.</ref>
3. # மாங்குடி மருதனாரின் மகன் மருதன் இளநாகனார் மதுரையில் புலவர்கள் கூடிச் ‘செதுமொழி’ (செம்மொழி)யைப் புதுமொழியாகப் படைத்ததைக் குறிப்பிடுகிறார். <ref>“மதிமொழி இடன்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலன்நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர!” (மாங்குடி) மருதன் இளநாகனர் - கலித்தொகை 68</ref>
4. # சேர அரசன் பாலைபாடிய பெருங்கடுங்கோ கூடல் எனப்பட்ட மதுரையில் புலவர்கள் புலன் நாவால் புதிய சொற்களை வழங்கும் வேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று பொருள் தேடச் சென்ற தலைவன் தலைவிக்கு வாக்குத் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.<ref> “நிலன் நாவில் திரிதரூஉம் நீன்மாடக் கூடலார் புலன்நாவிற் பிறந்தசொல் புதிது உண்ணும்பொழுது அன்றோ --- சுடரிழாய் --- வருதும் என்று உரைத்ததை” – பாலைபாடிய பெருங்கடுங்கோ -கலித்தொகை 35</ref>
5. # மதுரையில் நெடியோன் புலவர்களைப் ‘புணர்கூட்டு’ என்னும் அமைப்பின் கீழ் ஒன்று திரட்டி தமிழைப் பாடவைத்தான். அது போன்றதொரு ஒருங்கிணைப்பைப் புகாரில் கரிகாலன் உருவாக்கிப் புலவர்கள் தமிழைத் திறனாய்வு செய்து வளர்க்கும் பணியை மேற்கொண்டான்.<ref> பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடி – பட்டினப்பாலை 169-171</ref>
6. # காவிரிப்பூம் பட்டினத்தில் மொழி வளர ஒன்றுகூடிய புலவர்களுக்குச் சோழன் கரிகாற் பெருவளத்தான் சோறு வழங்கிய செய்தி பாராட்டப்படுகிறது <ref>“புகழ் நிலைய மொழிவளர --- சோறு வாக்கிய பெருங்கஞ்சி” – பட்டினப்பாலை – 42-44</ref>
7. # சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பகைநாடுகளிலிருந்து தான் கொண்டுவந்த ‘கொண்டி’ச் செல்வத்தைக்கொண்டு ‘தண்டமிழைச் செறியச் செய்தான் என்று கபிலர் குறிப்பிடுகிறார் <ref>“கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து” (செல்வக்கடுங்கோ வாழியாதன் – கபிலர் - பதிற்றுப்பத்து 63</ref>
==புலவர் குழுவைக் குறிக்கும் சங்கம் என்னும் சொல்==
சங்கம்
8. மேலும் பிற்காலத்து இறையனார் களவியல் நக்கீரர் உரையும்,
9. ஆண்டாள் தன் திருப்பாவையில் “சங்கம் இருப்பார்போல் வந்து உன்னைச் சேவித்தோம்” (22) எனப் பாடுகிறார்.
வரிசை 24:
புணர்கூட்டு = சங்கம்
புணர்கூட்டு என்னும் சொல்லின் ஒப்புமை விளக்கச் சொல்லே சங்கம். புணர்தல் என்பது கூடுதல். கூட்டு என்பது கூம்பு போல் கூடுவது. சங்கின் உருவம்கூடிக் கூம்பிய உருளைதானே? சங்கைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ‘புரிவளை’தானே?
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது