ஒளித்தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*திருத்தம்*, உள்ளிணைப்புக்களிடல்
வரிசை 2:
[[படிமம்:Leaf 1 web.jpg|thumb|250px|[[இலை]] - ஒளிச்சேர்க்கை பெரும்பாலும் நிகழும் பகுதி]]
 
'''ஒளிச்சேர்க்கை''' அல்லது '''ஒளித்தொகுப்பு''' (''Photosynthesis'') என்பது [[தாவரம்|தாவரங்கள்]], [[பாசிகள்]] மற்றும் சிலவகை [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] போன்றவற்றில் நிகழும் ஒரு [[உயிர்வேதியியல்]] நிகழ்வு ஆகும். ஒளிச்சேர்க்கையின் மூலம் இவ்வுயிரினங்கள் [[ஒளி]]யின் ஆற்றலைப் பயன்டுத்திக் [[கார்பனீரொக்சைட்டுகாபனீரொக்சைட்டு]] [[வளிமம்|வளிமத்தைத்]] தமக்குத் தேவையான [[மாப்பொருள்]] என்னும் [[காபோவைதரேட்டு]] போன்ற கரிமவேதியல் பொருளாக மாற்றிக் கொள்ளும்<ref>{{cite book |author=Smith, A. L. |title=Oxford dictionary of biochemistry and molecular biology |publisher=Oxford University Press |location=Oxford [Oxfordshire] |year=1997 |pages=508 |isbn=0-19-854768-4 |quote=Photosynthesis - the synthesis by organisms of organic chemical compounds, esp. carbohydrates, from carbon dioxide using energy obtained from light rather than the oxidation of chemical compounds.}}</ref>.
 
தாவரங்களிலுள்ள [[பச்சையம்]] என்ற [[நிறமி]] பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கைவழியே தாவரங்களும், பாசிகளும், [[சயனோபாக்டீரியா]] (cyanobacteria) என்னும் உயிரினமும் கார்பனீரொக்சைட்டு வளிமத்தையும் [[நீர்|நீரையும்]] ஒளியின் ஆற்றலையும் பயன்படுத்திக் கார்போவைதரேட்டுக்களாக மாற்றிக் கொண்டு, [[உயிர்வளி]]யைக் (அல்லது [[ஆக்சிசன்|ஆக்சிசனை]]க்) கழிவுப்பொருளாக வெளிவிடுகின்றன. ஒளிச்சேர்க்கையின் விளைவால் [[ஆக்சிசன்]] (உயிர்வளி) வெளியாவதால் உலகின் உயிர்வாழ்வுக்கு இவ் ஒளிச்சேர்க்கை மிக அடிப்படையான ஒரு நிகழ்வாகும். ஏறத்தாழ எல்லா உயிர்களும் ஆக்சிசனை நேரடியான ஆற்றல் வாயிலாகவோ (மூலமாகவோ) அல்லது உணவுக்கு அடிப்படையாகவோ கொள்ளுகின்றன.<ref name=bryantfrigaard>{{cite journal | author = D.A. Bryant & N.-U. Frigaard |month=November | year = 2006 | title = Prokaryotic photosynthesis and phototrophy illuminated | journal = Trends Microbiol | volume = 14 | issue = 11 | pages=488 | doi = 10.1016/j.tim.2006.09.001 }}</ref>. ஒளிச்சேர்க்கையின் வழி பற்றப்படும் (பிடிக்கப்படும்) ஆற்றல் மிக மிகப் பெரியதாகும்: ஏறத்தாழ ஆண்டுதோறும் 100 [[டெரா வாட்]] ஆகும் (100,000,000,000,000 [[வாட்]])<ref>{{cite journal |author=Nealson KH, Conrad PG |title=Life: past, present and future |journal=Philos. Trans. R. Soc. Lond., B, Biol. Sci. |volume=354 |issue=1392 |pages=1923–39 |year=1999 |month=December |pmid=10670014 |pmc=1692713 |doi=10.1098/rstb.1999.0532 |url=http://journals.royalsociety.org/content/7r10hqn3rp1g1vag/}}</ref> என்று கணக்கிட்டு இருக்கின்றார்கள். இது ஏறத்தாழ உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த ஆற்றலின் அளவைப்போல் ஏழு மடங்காகும்<ref name=EIA>{{cite web | publisher= Energy Information Administration |url= http://www.eia.doe.gov/pub/international/iealf/table18.xls | title = World Consumption of Primary Energy by Energy Type and Selected Country Groups , 1980-2004 | format = XLS | date = July 31, 2006 | access date=2007-01-20}}</ref>. உலகில் நிகழும் ஒளிச்சேர்க்கையால் மரஞ்செடிகொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் மொத்தம் 100,000,000,000&nbsp;[[டன்]] [[கார்பன்-டை-ஆக்சைடு]] தனை உயிரகப் பொருளாக (biomass) ஆண்டுதோறும் மாற்றுகின்றன<ref>{{cite journal |author=Field CB, Behrenfeld MJ, Randerson JT, Falkowski P |title=Primary production of the biosphere: integrating terrestrial and oceanic components |journal=Science (journal) |volume=281 |issue=5374 |pages=237–40 |year=1998 |month=July |pmid=9657713 |doi=10.1126/science.281.5374.237}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஒளித்தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது