ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: ku:Elam
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: ar:عيلام; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 6:
[[ஈல மொழி]]க்கு வேறு எந்த மொழியுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. [[சுமேரிய மொழி]]யைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், [[ஈல-திராவிட மொழிக் குடும்பம்|ஈல-திராவிடம்]] என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
 
== சொற்பிறப்பு ==
ஈல மக்கள் தமது நாட்டை ''ஹல்தம்தி'' ''(Haltamti)'' என அழைத்தனர்.<ref name="Kent 1953 53">{{cite book|last=Kent|first=Roland|title=Old Persian: Grammar, Texts & Lexicon|series=American Oriental Series|volume=33)|publisher=American Oriental Society|year=1953|isbn=0-940490-33-1|pages=53}}</ref> சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே ''ஈலம்'', ''ஈலமு'' ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர்.<ref>{{cite book|editor=Jeremy Black, Andrew George & Nicholas Postgate (eds.)|title=A Concise Dictionary of Akkadian|publisher=Harrassowitz Verlag|year=1999|isbn=3-447-04225-7|page=68}}</ref> ஈப்ரூக்களின் பைபிளிலும் இது ''ஈலம்'' என்றே குறிப்பிடப்படுகிறது.
 
வரிசை 12:
உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான ''[[சூசா]]''வின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. [[தொலமி]]க்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை ''சூசியானா'' என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று [[குசெசுத்தான்]] என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே ''ஃபார்சு'' என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய [[பாரசீக மொழி]]யில், ''ஹூஜியா'' எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் ''ஹூஸ்'' எனப்பட்டது. இது ''சுசியானா'' என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் ''க்சுஸ்'' ''(Xuz)'' ஆனது. இது பின்னர் புதிய பாரசீக மொழியில் இடப்பெயர்களுக்கு அமையும் ''ஸ்தான்'' என்னும் பின்னொட்டுடன் சேர்ந்து ''குசெசுத்தான்'' என்ற பெயரைப் பெற்றது.
 
== வரலாறு ==
{{History of Iran}}
ஈலத்தின் வரலாறு துண்டு துண்டாகவே கிடைக்கிறது. சுமேரிய, அக்காடிய, பபிலோனிய மூலங்களில் இருந்தே பெரும்பாலும் இதன் வரலாறு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இரண்டு ஆயிரவாண்டுகளை உள்ளடக்கிய ஈலத்தின் வரலாறு வழக்கமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்தக் காலப் பகுதிகளுக்கும் முன்னுள்ள காலம், முதனிலை ஈலக் காலம் எனப்படுகிறது.
வரிசை 20:
* புதிய ஈலக் காலம்: கிமு 1100 - கிமு 539
 
=== முதனிலை ஈல நாகரிகம் ===
[[Fileபடிமம்:Choghazanbil2.jpg|left|thumb|200px|தற்போது [[சோகா சன்பில்]] (Chogha Zanbil) என அழைக்கப்படும் "சிகரட்" (ziggurat) களம்.]]
முதனிலை ஈல நாகரிகம் [[டைகிரிசு]], [[இயூபிரட்டீசு]] ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்குக் கிழக்கே உருவாகி வளர்ந்தது. இது தாழ்ந்த நிலத்தையும் அருகிலேயே வடக்கிலும், கிழக்கிலும் மேட்டு நிலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். குறைந்தது மூன்று முதனிலை ஈல அரசுகள் இணைந்தே ஈலம் உருவானதாகத் தெரிகிறது. இவை [[அன்சான்]], [[அவான்]], [[சிமாசுக்கி]] என்பன. இவற்றுள் "அன்சான்", தற்கால "ஃபார்சு" பகுதியிலும், "சிமாசுக்கி" தற்காலக் கேர்மனிலும் அமைந்திருந்தன. "அவான்" தற்கால [[லுரிசுத்தான்]] ஆக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவானைப் பற்றிய குறிப்புக்கள் பொதுவாக அன்சானைப் பற்றிய குறிப்புக்களிலும் பழமையானவை. இவ்விரு அரசுகளுமே ஒரே பகுதியில் வெவ்வேறு காலப் பகுதியில் இருந்திருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து. இந்த மையப் பகுதியுடன், இன்றைய "குசெசுத்தான்" ஆன "சுசியானா" அவ்வப்போது இணைந்தும் பிரிந்தும் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுடன் இப் பகுதிக்கு வெளியிலும் ஈரானியச் சமவெளிகளில் முதனிலை ஈலக் களங்கள் உள்ளன. இவற்றுள் [[வாராக்சே]], இன்றைய காசான் நகரின் புறநகர்ப் பகுதியான [[சியால்க்]], கெர்மான் மாகாணத்தில் உள்ள [[சிரோஃப்ட்]] என்பன அடங்கும். பழைய ஈலக் காலத்தில், சுமேரியரின் படையெடுப்புகளுக்கு எதிராகவே சிறிய அரசுகள் இணைந்து ஈல அரசு உருவானது. இவ்வரசுக்குள் அடங்கிய பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட வளங்களை திறமையான முறையில் பகிர்ந்து கொள்வதற்கு வசதியை வழங்கக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அரசின் கீழ் இப்பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருப்பதற்கான வல்லமையே ஈலவர்களின் வலிமையாக இருந்தது. ஒரு கூட்டாட்சி அரச அமைப்பின் அடிப்படையிலேயே இதை அவர்கள் செய்ய முடிந்தது.
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Elam}}
* [http://www.iranchamber.com/history/elamite/elamite.php ஈலப் பேரரசின் வரலாறு]
* [http://www.iranchamber.com/art/articles/art_of_elamites.php ஈலக் கலைகள்]
* [http://www.allempires.com/article/index.php?q=The_Elamite_Empire All Empires – ஈலப் பேரரசு]
* [http://telugutanam.blogspot.com/2006/02/scholars-see-telugu-mesopotamia-link.html தெலுங்கு, மெசொப்பொத்தேமியா தொடர்புகள்]
* [http://www.cappuccinomag.com/iranologyenglish/001141.shtml ஈரானியர்களுக்கு முந்திய ஈரான்]
* [http://www.iranicaonline.org/articles/elam-index ஈரானிக்கா கலைக்களஞ்சியம்: ஈலம்]
* [http://www.systemdynamics.org/conf2002/extras/SVERD1_S.PDF கடந்த 120,000 ஆண்டுகளில், மொழிகளின் தோற்றத்துக்கும் பரவலுக்குமான மாதிரியாக்கம்.]
* Hamid-Reza Hosseini, ''Shush at the foot of [[Louvre]]'' (''Shush dar dāman-e Louvre''), in Persian, Jadid Online, 10 March 2009, [http://www.jadidonline.com/story/10032009/frnk/susa_shush].<br />Audio slideshow: [http://www.jadidonline.com/images/stories/flash_multimedia/Susa_shush_test/susa_high.html] (6 நிமி 31 செக்).
 
 
[[பகுப்பு:நாகரிகங்கள்]]
வரி 43 ⟶ 42:
 
[[am:ኤላም]]
[[ar:حضارة عيلام]]
[[be:Элам]]
[[be-x-old:Элам]]
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது