கூழ்மப்பிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி →‎அடிப்படை: *விரிவாக்கம்*
வரிசை 8:
 
சிறுநீரகங்கள் உடல்நலனைப் பராமரிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலின் நீர் மற்றும் கனிமங்களின் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சல்மேட்) உட்புறச் சமநிலையைப் பராமரிக்கின்றன. சுவாசித்தல் வழியாக வெளியேற்ற முடியாத அமில வளர்சிதை மாற்ற இறுதிப் பொருட்களையும் சிறுநீரகம் வெளியேற்றுகிறது.. மேலும் [[அகச்சுரப்பித் தொகுதி]]யின் ஒரு பகுதியாக சிறுநீரகங்கள் எரித்ரோபொயட்டின் மற்றும் 1,25-டைஹைட்ராக்சிகோல்கால்சிஃபெரோல் (கால்சிட்ரால்) ஆகியவற்றை உருவாக்குகின்றன . எரித்ரோபொயட்டின் இரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்தில் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் கால்சிட்ரோல் எலும்பு உருவாக்கத்தில் முக்கிய பங்குவகிக்கிறது.<ref>ப்ருண்டேக் டி. ''ரீனல் டிஸாடர்ஸ்'' . சென்ட். லூயிஸ், MO: மோஸ்பி; 1992</ref> கூழ்மப்பிரிப்பு சிறுநீரகச் செயல்பாட்டிற்கான முழுமையான மாற்றுச் சிகிச்சை அல்ல; ஏனெனில் இவை சிறுநீரகத்தின் இந்த அக்கச்சுரப்பி செயல்பாட்டைச் செய்வதில்லை. கூழ்மப்பிரிப்பு சிகிச்சைகள் ஊடுபரவல் (கழிவு நீக்கம்) மற்றும் நுண் வடிகட்டல் (திரவ நீக்கம்) மூலமாக இந்த செயல்பாடுகளில் சிலவற்றை மாற்றுகின்றன.<ref>http://www.kidneyatlas.org/book5/adk5-01.ccc.QXD.pdf அட்லஸ் ஆஃப் டிசீசஸ் ஆஃப் த கிட்னி, பகுதி 5, பிரின்சிபில்ஸ் ஆஃப் டயாலிசிஸ்: டிஃப்யூசன், கண்வெக்சன் அண்ட் டயாலிசிஸ் மெசின்ஸ்</ref>
 
==வரலாறு==
மரு. வில்லெம் கோல்ஃப் என்ற டச்சு மருத்துவர் 1943ஆம் ஆண்டு [[நாசி ஜெர்மனி|நாசிகளால்]] [[நெதர்லாந்து]] பிடிபட்டிருந்த காலத்தில் முதன்முதலாக செயலாற்றுகின்ற நீர்பிரிப்பு சாதனமொன்றை உருவாக்கினார்.<ref name=Davita>''An online source for kidney disease and dialysis information''. http://www.davita.com/dialysis/c/197; Davita: 2010</ref> சரியான உபகரணங்கள் கிடைக்காதநிலையில் [[சாசேஜ்]] உறைகள், குளிர்பான கலன்கள், [[துணி துவைப்பி]], மேலும் கிடைத்த பிற பொருட்களைக் கொண்டு இதனை உருவாக்கினார். அடுத்த இரு ஆண்டுகளில் கோல்ஃப் கடிய சிறுநீரகக் காயம்|உடனடி சிறுநீரகக் கோளாறு கண்ட 16 நோயாளிகளுக்கு இதன்ப் பயன்படுத்தினார்; ஆனால் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆயினும் 1945ஆம் ஆண்டில் கூடுதலான குருதி யூரியாவினால் ஆழ்மயக்கத்தில் இருந்த ஓர் 67 வயதுப் பெண்மணிக்கு இந்த சாதனம் மூலம் 11மணி நேரம் குருதிப் பிரிப்பு மேற்கொண்ட பின்னர் நினைவு திரும்பப் பெற்று ஏழு ஆண்டுகள் வாழந்து பின்னர் பிரிதொரு காரணத்தால் மரணமடைந்தார். இவரே செயற்கை முறை சிறுநீர் பிரிப்பு முறையில் வெற்றிகரமாக சிகிட்சை அளிக்கப்பட்ட முதல் நோயாளியாவார்.<ref name=Davita/>
 
== அடிப்படை ==
"https://ta.wikipedia.org/wiki/கூழ்மப்பிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது