மாற்றுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==ஆட்சியுடைய, பின்னடைவான எதிருருக்கள்==
அனேகமான நிலைகளில், ஒரு மரபணு இருக்கையிலுள்ள எதிருருக்களுக்கிடையிலான மரபணுவமைப்பு இடைத்தாக்கம் [[ஆட்சியுடையது (உயிரியல்)|ஆட்சியுடைய]], [[பின்னடைவானது (உயிரியல்)|பின்னடைவான]] அலகுகளால் விளக்கப்படுகின்றது. இரு சமநுக மரபணுவமைப்புக்களில் எது இதரநுக மரபணுவமைப்பிற்குரியதாக உள்ள தோற்றவமைப்பை ஒத்திருக்கின்றதோ, அந்த சமநுகத்திலுள்ள எதிருருவே ஆட்சியுடையதாகக் கருதப்படும்<ref name="Essential genetics: A genomics perspective">{{cite book |title=Essential genetics: A genomics perspective |edition=4th |last=Hartl |first=Daniel L. |authorlink= |coauthors=Elizabeth W. Jones |year=2005 |publisher=Jones & Bartlett Publishers |location= |isbn=978-0-7637-3527-2 |oclc= |page=600 |url= |accessdate=5 October 2009}}</ref>. இதரநுகத்திற்குரிய தோற்றவமைப்பை ஒத்திராத மற்றைய சமநுகத்திலுள்ள எதிருரு பின்னடைவானது எனப்படும்.
 
காட்டு இனமாகக் கருதப்படும் பழ ஈ (''Drosophila melanogaster'') போன்ற உயிரினங்களின் சிறப்பான சில தோற்றவமைப்பிற்கு பங்களிப்பு செய்யும் எதிருருவை சில சமயம் ''காட்டுவகை எதிருரு'' எனவும் அழைப்பர். அப்படியான காட்டுவகை எதிருருக்கள், ஆட்சியுடையவையாக, பொதுவானவையாக, சாதாரணமானவையாகக் கருதப்படும். முரணாக, [[மரபணு திடீர்மாற்றம்]] அடைந்தவை பின்னடைவானவையாக இருக்கும். பொதுவாக [[மரபணு கோளாறு]] [[நோய்]]களில், காட்டுவகை சமநுக எதிருரு கொண்ட மரபணுவமைப்பு அதிகமான தனியன்களிலும், மரபணு திடீர்மாற்றத்துக்கு உட்பட்ட சமநுக எதிருரு கொண்ட மரபணுவமைப்பு பாதிக்கப்பட்ட தனியன்களிலும், இதரநுக எதிருரு கொண்ட மரபணுவமைப்பு நோயை காவும் தனியன்களிலும் காணப்படுவதாக கருதப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மாற்றுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது