ஆட்சியுடையது (மரபியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 10:
[[மரபியல்|மரபியலில்]] '''ஆட்சியுடைது''' என்றால், ஒரு தனி [[மரபணு]]வில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது [[எதிருரு]]க்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது எதிருருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய எதிருரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.
 
இரு எதிருருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன [[பூ]]வின் [[நிறம்|நிறத்திற்குக்]] காரணமான மரபணுவில் உள்ள இரு எதிருருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான [[மரபணுவமைப்பு]]க்கள் தோன்றலாம். இவற்றில் Bb என்ற இதரநுக மரபணுவமைப்பானது, BB என்ற சமநுக மரபணுவமைப்பின் இயல்பையே தனது [[தோற்றவமைப்பு|தோற்றவமைப்பில்]] வெளிக்காட்டுமாயின், B எதிருரு, b எதிருருவுக்கு ஆட்சியுடையது எனலாம். இங்கே பூவில் ஊதா, வெள்ளை என்ற இரண்டே வைகையான நிறங்களைக் கொண்ட தோற்றவமைப்புக்களே உருவாகும். ஊதா நிறமானது வெள்ளை நிறத்திற்கு ஆட்சியுடைய நிறமாக உள்ளது. இந்நிலையில் b எதிருரு, B எதிருருவுக்கு [[பின்னடைவானது (மரபியல்)|பின்னடைவானது]] எனக் கூறுவோம்.
 
நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:மரபணு]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்சியுடையது_(மரபியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது