திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி திருத்தம்
வரிசை 36:
பிலாத்து இயேசுவின் உருவத்தை ஓவியமாக வரைந்தார் என்னும் கதை தவிர, வேறொரு நிகழ்ச்சியை நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த செசரியா நகர் யூசேபியஸ் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதேஸ்ஸா நகர் அரசர் ஆப்கார் (King Abgar of Edessa), நோய்வாய்ப்பட்ட தம் மகனைக் குணப்படுத்த இயேசு வரவேண்டும் என்று மடல் அனுப்பினாராம். இக்கதையில் இயேசுவின் உருவச் சாயல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் "ஆதாய் கொள்கை" (''Doctrine of Addai'') என்னும் சிரிய மொழி ஏட்டில் இயேசுவின் திருவுருவச் சாயல் குறிப்பிடப்படுகிறது. சிறிது பிற்பட்ட காலத்தில் எவாக்ரியுஸ் (''Evagrius'') என்பவர் தரும் குறிப்பின்படி, இயேசு சிலுவை சுமந்து சென்றபோது தம் முகத்தை ஒரு துணியால் துடைத்தபோது அத்துணியில் அவருடைய சாயல் பதிந்த வரலாறு வருகிறது.<ref>''Veronica and her Cloth'', Kuryluk, Ewa, Basil Blackwell, Cambridge, 1991</ref>இயேசுவின் சாயல் அதிசயமாகப் பதிந்த அத்துணி எதேஸ்ஸா நகரில் 10ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாகவும், பின் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளுக்குச்]] சென்றதாகவும், 1204இல் சிலுவைப் போர் வீரர்கள் காண்ஸ்டாண்டிநோபுளைத் தாக்கியபோது அது காணாமற்போனதாகவும், அச்சாயலின் பிரதிகள் பல உருவாக்கப்பட்டதாகவும் வரலாறு எழுந்தது.
 
மேலும், யூசேபியஸ் "திருச்சபை வரலாறு" என்னும் தம் நூலில், இயேசு, பேதுரு, பவுல் ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்ததாகவும், செசரியாவில் பான் (''Pan'') என்னும் கிரேக்க கடவுளின் வெண்கலச் சிலை இருந்ததாகவும் சிலர் அச்சிலை இயேசுவின் சாயல் என்று கூறியதாகவும் எழுதுகிறார். பான் சிலைத் தொகுதியில் இரட்டைப் போர்வை அணிந்த ஒருவர் நின்றுகொண்டு தம் கைகளை நீட்டிய நிலையில் இருந்தார் எனவும் அவர்முன் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு இருந்ததாகவும் அப்பெண்ணே லூக்கா நற்செய்தியில் (லூக் 8:43-48) வருகின்ற நோய்வாய்ப்பட்ட பெண் என்று மக்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.<ref>[Eusebius of Caesarea, ''Church History'' 7:18]]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது