நொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:Ензім
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ie:Enzime; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 24:
1897ல் ஜெர்மனியைச் சேர்ந்த [[எடுவர்டு பூக்னர்]] பெர்லின் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுகளின் பயனாய் சக்கரைக் கரைசலை ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிரிகள் இல்லாமலே எத்தனால் என்னும் ஆல்க்கஹலாய் நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்தார்<ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1907/buchner-bio.html நோபல் பரிசு நிறுவனத்தில் நோபல் பரிசாளர் எடுவர்டு பூக்னர் வ்ரலாறு (http://nobelprize.org)]</ref>. இதற்குப் பயன்பட்ட பொருளை (நொதியை) [[சைமேசு]]. நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையக் கண்டதற்காக இவர் 1907 ஆம் ஆண்டிற்கான [[வேதியியல்|வேதியியலுக்கான]] [[நோபல் பரிசு|நோபல் பரிசைப்]] பெற்றார் <ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1907/buchner-lecture.html நோபல் நிறுவனத்தில் உள்ள எடுவர்டு பூக்னர்ரின் 1907 ஆம் ஆண்டின் நோபல் பரிசுரை (http://nobelprize.org)]</ref>. பூக்னர் அவர்களின் முறையைப் பின்பற்றி நொதிகளுக்கு -ஏசு (-ase) என்னும் பின்னொட்டு சேர்ப்பது இன்று மரபு. எடுத்துக்காட்டாக, கொழுப்புகளைப் பிரித்திளக்கும் லைப்பேசு, பாலில் உள்ள லாக்டோசைப் பிரிக்க உதவும் லாக்ட்டேசு முதலியவற்றைச் சொல்லலாம்.
 
== உயிரியல் நொதிகளின் வகைப்பாடுகள் ==
 
உலகளாவிய உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் குழுமம் (International Union of Biochemistry and Molecular Biology) நொதிகளை 6 பெரும் வகைகளாகப் பிரித்துள்ளது. இந்த ஒவ்வொரு வகைக்குள்ளும் துணைவகைகள் பல உண்டு. துணைவகைக்குள்ளும் துணைவகைகள் உண்டு. இவ்வாறாக ஒவ்வொரு நொதியும் நான்கு இலக்க ‌நொதியெண்ணால் (ஈ.சி. எண், EC number) அடையாளம் காணப்படுகிறது. எ.கா: 1.1.1.1 என்பது ஆல்க்ககால் டிஐதரோச்செனேசு (Alcohol dehydrogenase) குடும்ப நொதிகளைக் குறிக்கும் நொதிஎண் ஆகும். இக்குடும்பத்தில் ஏழு ஒத்தநொதிகள்(‌isoenzymes/isozymes) உள்ளன. <br /> அவையாவன,<br />
 
=== ஆக்சிசனேற்றி-ஒடுக்கி (Oxidoreductases) ===
ஒரு வினையில் ஆக்சிசனேற்றம் நடக்கிறதென்றால் ஒடுக்கமும் நடக்கிறதென்று பொருள். ஏனெனில் ஆக்சிசனேற்றி ஒடுக்கமடையும். ஒடுக்கி ஆக்சிசனேற்றமடையும். எனினும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒடுக்கி எனும் பெயரையே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
 
எ.கா: பல உயிரினங்களிலும் செடிகொடியினங்களிலும் காணப்படும் [[லாக்டேட் டிஐதரோச்செனேசு]] (Lactate dehydrogenase) (1.1.1.27)
 
=== மாற்றிநொதிகள் (Transferases) ===
இவை, கரிமம், நைட்ரசன், பாசுப்பரசு (C- N- P-) ஆகிய உடைய [[வேதி வினைக்குழு]]க்களை (எ.கா: மெத்தில், கிளைக்கோசைல்) இடம் மாற்றுகின்றன.
 
*'''எ.கா:''' சிரைன் ஐதராக்சி மெத்தில்டிரான்சுஃவெரேசு(Serine hydroxymethyltransferase)
 
=== நீராற் பகுப்பிகள் (ஐதராலேசு) ===
 
நீரைச் சோ்ப்பதன் மூலம் கரிம-கரிம, கரிம-ஆக்சிச, கரிம-நைட்ரச (C-C, C-O, C-N) போன்ற பிணைப்புகளை பிரிவடைகின்றன.
வரிசை 49:
(யூரியாவை நீராற் பகுத்து அமோனிய‌ாவைப் பெறலாம் என முதலில் கண்டறிந்தவர் வோலார் ஆவார்)
 
=== நீக்கிகள் (லையேசு) ===
C-C / C-N / C-S இடையிலான பிணைப்பை உடைத்து இரட்டைப் பிணைப்பை உருவாக்குகின்றன.
 
* '''எ.கா:''' பைருவேட் டி கார்பாக்சிலேசு
 
=== ஐசோமரேசுகள் (Isomerase) ===
 
*''' எ.கா:''' மெத்தில் மலோனைல் கோ ஏ மியூட்டேசு
 
=== உருவாக்கிகள் (லைகேசு) ===
அதிக ஆற்றல் உள்ள பாசுப்பேட்டுகளை நீராற் பகுப்பதன் மூலம் கார்பனுக்கும் -O, -N, -Sக்கும் இடையே பிணைப்பை உருவாக்குகின்றன.
 
* '''எ.கா:''' பைருவேட் கார்பாக்சிலேசு
 
== இயங்கிடம் ==
 
ஒவ்வொரு நொதியிலும் சில குறிப்பிட்ட அமினோ அமிலத் தொடா்கள் சோ்ந்து வினைபடுபொருள் வந்து பிணைவதற்கு ஏற்றாற்போல் ஒரு முப்பரிமாண அமைப்பை உருவாக்குகின்றன. இவ்விடமே இயங்கிடம் (Active Site) எனப்படும். இது தான் ஒரு நொதியின் தனித்தன்மையை (specificity) /துல்லியத்தன்மையை முடிவு செய்கின்றன. இயங்கிடத்தில் வினைபடுபொருள் வந்து சோ்ந்து நொதி-வினைபடுபொருள் கூட்டமைவு/சிக்கலமைவு (complex) உண்டாகிறது. இது பின்னால் நொதி-வினைவிளைபொருளாய் மாறியதும் நொதியும் வினைவிளை பொருளும் தனித்தனியே பிரிந்து விடுகின்றன.
 
== நொதிகளின் தனித்தன்மை ==
 
நொதிகள் மிகுந்த தனித்துவம் (specificity) உடையவை. ஒரு நொதி ஒரு குறிப்பிட்ட வகை வேதிவினையில் தான் வினையூக்கியாகச் செயல்படும். ஆதலால் அவை ஒன்று அல்லது சில வினைபடுபொருட்களுடன் மட்டுமே சேரும்.
 
== இணைக்காரணி மற்றும் இணை நொதி(Co-factor & Co-enzyme): ==
 
மிகப் பெரும்பாலான நொதிகள் புரதங்களே என்று மேலே கண்டோம். ஆனால் சில நொதிகளில் இந்த புரதப் பகுதி மட்டுமே வினை ஊக்கத்திற்குப் போதாது. இதற்காக புரதமல்லாத மூலக்கூறொன்றும் இன்றியமையாகிறது.
வரிசை 129:
[[ia:Enzyma]]
[[id:Enzim]]
[[ie:Enzime]]
[[io:Enzimo]]
[[is:Ensím]]
"https://ta.wikipedia.org/wiki/நொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது