திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 87:
தெயோதோருஸ் லெக்டோர் (Theodorus Lector) என்னும் கிறித்தவ அறிஞர் 6ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய "திருச்சபை வரலாறு" என்னும் நூலில்<ref>Theodorus Lector, ''History of the Church'', 1:1</ref> கூறுவது: "பேரரசர் இரண்டாம் தெயோடோசியுசின் (இறப்பு: கிபி 460)மனைவியாகிய யூதோக்கியா (Eudokia) என்பவர் ''திருத்தூதர் லூக்காவால் வரையப்பட்ட'' "இறைவனின் அன்னை" என்னும் மரியாவின் திருவோவியத்தை (''Hodegatria'' = "வழிகாட்டுபவர்") [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] பேரரசர் அர்க்காடியுஸ் என்பவரின் மகளாகிய புல்க்கேரியாவுக்கு அனுப்பிவைத்தார்." <ref>Nicephorus Callistus Xanthopoulos எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி பிற்காலச் செருகலாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.</ref>
 
மார்கரீத்தா குவார்தூச்சி (Margherita Guarducci) என்னும் தொல்பொருள் ஆய்வாளர், மேலே குறிக்கப்பட்ட "இறைவனின் அன்னை" திருவோவியம் வட்ட வடிவில் இருந்தது என்றும், அதில் [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியாவின்]] முகம் மட்டுமே வரையப்பட்டிருந்தது என்றும் ஒரு மரபு உள்ளதைக் குறிப்பிடுகிறார். அத்திருவோவியம் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளை]] வந்தடைந்ததும், அங்கு மரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டது என்றும், இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியமே பிற்காலத்தில் Hodegatria ([இயேசுவிடம் செல்ல] "வழிகாட்டுபவர்") என்னும் பெயர் கொண்ட அன்னையின் திருவோவியமாக வணங்கப்படலாயிற்று என்றும் அம்மரபு கூறுகிறது.
 
அறிஞர் குவார்தூச்சி இன்னொரு மரபையும் குறிப்பிட்டுள்ளார். கிபி 1261இல் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளின்]] கடைசி மன்னர் இரண்டாம் பால்ட்வின் அந்நகரை விட்டுச் சென்றபோது மேற்கூறிய மரியாவின் கூட்டுத் திருவோவியத்தின் வட்டவடிவிலான முகப்பகுதியை மட்டும் தம்மோடு எடுத்துச் சென்றாராம். அது அங்கேவின் (Angevin) என்னும் அரச குடும்பத்தின் உடைமையாக இருந்ததாம். பின்னர், காண்ஸ்டாண்டிநோபுளில் நிகழ்ந்ததுபோல மீண்டும் ஒருமுறை, மரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பதுபோல் வரையப்பட்டிருந்த பெரிய நீள்சதுர ஓவியத்தில் மரியாவின் முகமாகப் பொருத்தப்பட்டதாம். இவ்வாறு உருவான கூட்டுத் திருவோவியம் "மோந்தேவேர்ஜினே" (Montevergine) என்னும் இத்தாலிய நகரில் அமைந்துள்ள அன்னை மரியாவின் பெருங்கோவிலில்<ref>[http://en.wikipedia.org/wiki/Montevergine மோந்தேவேர்ஜினே மரியா கோவில்]</ref> மக்களால் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது<ref>[http://www.avellinomagazine.it/foto%20home%20page/madonna.jpg AvellinoMagazine.it]</ref><ref>[http://www.mariadinazareth.it/www2005/Apparizioni/Montevergine4.jpg Mariadinazareth.it]</ref>
வரிசை 120:
*(மேலைத் திருச்சபையில்) குவாடலூப்பே அன்னை திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Our_Lady_of_Guadalupe குவாடலூப்பே அன்னை திருவோவியம்]</ref>
 
==திருவோவியங்கள் கூறும் இறையியல்==
 
கிறித்தவ மரபில் திருவோவியங்கள் ஆழ்ந்த இறையியல் உண்மைகளை உள்ளடக்கியிருப்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிறித்தவ நம்பிக்கைப்படி, கடவுள் மனிதர் மேல் கொண்ட பேரன்பினால் மனிதராகப் பிறந்து, மனிதரோடு மனிதராக வாழ்ந்து, சிலுவையில் உயிர்துறந்து மனிதரைப் பாவங்களிலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கு நிறைவாழ்வைப் பெற்றுத் தந்தார். இவ்வாறு மனிதராகப் பிறந்தவர் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய திருமகனே என்றும், அவரே [[மரியா (இயேசுவின் தாய்)|கன்னி மரியாவின்]] வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருவாக உருவாகி மனிதரானவர் என்றும் கிறித்தவம் நம்புகிறது.
 
[[யோவான் (நற்செய்தி)|யோவான் நற்செய்தி கூறுவதுபோல,
{{cquote|தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது...வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:1,14).}}
 
கடவுளின் வாக்கு, நாசரேத்து இயேசு என்னும் வரலாற்று மனிதராக உலகில் பிறந்தார் ("மனித அவதாரம்" = Incarnation) என்னும் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் பண்புகளை இயற்கைப் பொருள்களின் வழியாகச் சித்தரிப்பது பொருத்தமே என்றும், இயற்கைக்கும் கடவுளுக்கும் இடையே பிணைக்கமுடியாத பிளவு இல்லை என்றும் கிறித்தவம் கூறுகிறது. இதுவே திருவோவியங்கள் எழுந்த வரலாற்றுக்கு அடித்தளம் ஆகும். இவ்விதத்தில் கிறித்தவம் தனக்கு முன்வரலாறாக அமைந்த யூத சமயத்திலிருந்து மாறுபடுகிறது. யூத சமயப் புரிதலின்படி, கடவுளுக்கு எவ்விதத்திலும் சாயலோ, உருவமோ, வடிவமோ கொடுப்பது தடைசெய்யப்பட்டது.
 
[[இணைச் சட்டம் (நூல்)|இணைச் சட்டம்]] என்னும் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு]] நூல் கீழ்வருமாறு கூறுகிறது (இச 5:6-9):
{{cquote|உன் கடவுளாகிய ஆண்டவர் நானே...என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது. மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்.}}
 
[[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] என்னும் விவிலிய நூல்,
{{cquote|நானே உன் கடவுளாகிய ஆண்டவர்...மேலே விண்விளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்}}
என்றுரைக்கிறது (விப 20:1-5).
 
திருவோவியத்திற்கோ திருச்சிலைக்கோ செலுத்துகின்ற வணக்கம் அப்பொருளுக்குச் செலுத்தும் வணக்கம் அல்ல, மாறாக, அப்பொருள் யாரைக் குறித்து நிற்கிறதோ அவருக்கே செலுத்தும் வணக்கம் என்பதைத் தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்கள் தெளிவாக விளக்கினார்கள். இதற்கு அவர்கள் இரு சொற்களைப் பயன்படுத்தினர்.
 
"சாயல்" (ஓவியம்) என்பது eikōn (εἰκών) என்றால், அதற்கு மூலமான "முதல்பொருள்" archetupon (ἀρχέτυπον) ஆகும். மனிதர் செலுத்தும் வணக்கம் சாயலுக்கு அல்ல, அது குறித்துநிற்கின்ற மூலப்பொருளுக்கே ஆகும். பண்டைக் கிறித்தவ அறிஞர் புனித பேசில் கூறுவதுபோல<ref>மேலும் காண்க: Price, S.R.F. ''Rituals and power: the Roman imperial cult in Asia Minor,'' (reprint, illustrated). Cambridge University Press, 1986, pp. 204-5, paraphrasing St. Basil, ''Homily'' 24: "on seeing an image of the king in the square, one does not allege that there are two kings". Veneration of the image venerates its original: a similar analogy is implicit in the images used for the [[Imperial cult (ancient Rome)|Roman Imperial cult]]. நற்செய்தி நூல்கள் இவ்வாறு வேறுபடுத்தி விளக்கவில்லை.</ref>,
 
{{cquote|நான் சீசரின் சிலையைக் காட்டி, இது யார் என்று கேட்டால், நீ 'சீசர்' என்றுதானே பதில் சொல்வாய்? அப்படிச் சொல்லும்போது, அச்சிலை செய்யப்பட்ட கல் சீசர் என்று பொருள் ஆகாதல்லவா. அச்சிலைக்கு நீ கொடுக்கும் பெயரும் வணக்கமும் அதற்கு மூலப்பொருளாக (archetype) உள்ள சீசருக்கு அளிக்கப்படுகின்றன என்பதே உண்மை.}}
 
==கீழைத் திருச்சபையில் திருச்சிலைக்கும் திருவோவியத்துக்கும் இடையே வேறுபாடு==
 
கீழைத் திருச்சபை (Eastern Orthodox) மரபுப்படி, தட்டையான தளம் தான் திருவோவியம் எழுதப் பயன்படுத்தப்பட்டது. அது இரு பரிமாணம் கொண்டது. கிறித்தவம் வேரூன்றிய கிரேக்க கலாச்சாரத்தில் முப்பரிமாணச் சிலை வடிக்கும் கலைப்பாணி நன்கு வளர்ந்திருந்தது. அத்தகு சிலைகள் கிரேக்க கடவுளரையும் பெருமக்களையும் சிறப்பிக்க உருவாக்கப்பட்டன. அவை உடல் சார்ந்த "மனித" அம்சங்களுக்கு அழுத்தம் கொடுத்தன; தெய்விக மற்றும் ஆன்மிக அழுத்தம் குறைவாகவே இருந்தது.
 
எனவே, கிரேக்க கலாச்சாரத்தில் வேரூன்றிய கீழைக் கிறித்தவம் கடவுள் சார்ந்தவற்றை மனித கலையில் வெளிப்படுத்த முப்பரிமாணச் சிலைகள் செதுக்குவது சரியல்லவென்றும், இரு பரிமாணத் திருவோவியங்கள் ஏற்புடையனவென்றும் முடிவுசெய்தது.
 
மேலைப் பகுதியில் வேரூன்றிய கிறித்தவம் இவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அங்கு, ஓவியங்களும் ஏற்கப்பட்டன, திருச்சிலைகளும் ஏற்கப்பட்டன. இரு பரிமாணக் கலையும் சரி, முப்பரிமாணக் கலையும் சரி, அவை கடவுள் சார்ந்தவற்றை மனித முறையில் எடுத்துரைக்க பொருத்தமானவையே என்னும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. படைப்புப் பொருள்கள் வழியாகக் கடவுளின் பெருமையை மனிதர் ஓரளவுக்கு வெளிப்படுத்த முடியும் என்பதும், படைப்புப் பொருளிலிருந்து, படைத்தவரைக் கண்டு அவருக்கே வணக்கம் செலுத்துவது தகுமே என்பதும் மேலைத் திருச்சபையின் அணுகுமுறை ஆயிற்று.
 
கீழைத் திருச்சபையில் பிசான்சியக் கலை (Byzantine art) திருவோவியக் கலையாக வளர்ந்தது. அந்த ஓவியங்களில் தெய்விக அம்சமும் புனிதத் தன்மையும் அழுத்தம் பெற்றன. மனித வலுவின்மையும் புலன் கூறுகளும் அழுத்தம் பெறவில்லை. கிறித்தவக் குறியீடுகள் (symbols) மூலமாகத் திருவோவியங்கள் ஆழ்ந்த மறையுண்மைகளை மிக எளிய முறையில் எடுத்துரைக்கின்றன. இவ்வாறு, இறையியலில் தனித் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் கிறித்தவ சமய உண்மைகளைப் புகட்டும் கருவியாகத் திருவோவியங்கள் அமைந்தன.
 
இன்றும் கூட, கீழைத் திருச்சபை மக்களின் வீடுகளிலும் கோவில்களிலும் திருவோவியங்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் காணலாம்.
==ஆதாரங்கள்==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது