உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர் வேண்டி....: புதிய பகுதி
வரிசை 427:
::* பிற உயிரினங்களும் இதன் பண்பையொத்தேக் காணப்படுகிறது.
::* மேலேக் குறிப்பிட்ட பண்புகளையுடைய உயிரினங்களின் பிரிவை ஆங்கிலத்தில் “Gelatinous zooplankton" என அழைக்கிறார்கள். நான் இதற்கு கலைச்சொல் உருவாக்க உங்களின் உதவியை நாடியுள்ளேன். நன்றிகளுடன்.--[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 17:41, 14 அக்டோபர் 2011 (UTC)
 
:அன்புள்ள சிங்கமுகன் அவர்களுக்கு வணக்கம்.
:தங்களின் இராப்பியணிப்பாசி கட்டுரை படித்தேன்
: தங்கள் தமிழ்த்தொண்டு தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக உள்ளது.
 
:'ஊன்பசை' எனத் தாங்கள் உருவாக்கியுள்ள கலைச்சொல்லே பொருத்தமானதுதான். எனினும் அதன் வழுவழுப்புத் தன்மையையும் (நழுவு-தன்மையையும்) சேர்த்து உணர்த்தும் வகையில் அமையின் நலம்
:'ஊன்வழும்பு' என்னும் கலைச்சொல் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். எண்ணிப் பாருங்கள். பொருத்தமானதைக் கையாண்டு கட்டுரையை உருவாக்குங்கள். மூன்றெழுத்து - கணக்குப்படி பார்த்தால் ஊன்வழும்பு என்னும் சொல்லிலுள்ள 'பு' குற்றியலுகரம் ஆகையால் இச்சொல்லும் மூன்றெழுத்துச் சொல்லே.
 
:திருச்சி மாவட்டத்தில் உள்ள செங்காட்டுப்பட்டி என்பதை என் பெயரிலுள்ள செங்கை குறிக்கும்.
:அங்கே சென்றான் என்று சொல்லிப் பாருங்கள். senr'aan என்றுதானே ஒலிக்கிறோம்.
:மொழியின் முதலில் வரும் 'ச' எழுத்தை இப்படி ஒலிப்பதே இயல்பு. இடையில் வரின் அச்சம் accham என்பது போல் ஒலிக்கும்.--[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 21:53, 14 அக்டோபர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது