"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,376 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
==பண்புகள்==
சொறிமுட்டை/கடற்சொறி என்னும் உயிரினம் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இதில் சில கடல் மேற்புரத்திலும் சில கடலின் அடிப்பகுதியிலும் வாழக்கூடியது. அதன் அளவு பல வகையாகவும், சிறிய நகக் கனுவளவுக்கும் அதே ஒரு குளிர்சாதனப்பெட்டி யளவிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பெரும்பாலும் ஒளியூடுருவும் தன்மையுள்ளதாகவும், சில அடர் வண்ணங்களிலும் இருக்கின்றன. இதிற் சில இப்பண்புகளையுடைத்து செவ்வூதா, மஞ்சள் மற்றும் காவி நிறங்களிலும் காணப்படுகின்றன.
[[படிமம்:Mike Johnston - Jelly Fish (by).jpg|thumb|right|200px|சொறிமுட்டை]]
 
இதற்கு முதுகெலும்புகள் மற்றும் முறையான சுவாசமண்டலங்கள் அற்றும் இருக்கின்றன. இது தன் உடலை உயிர்வளியால் நிரப்ப நீரில் விரவிக்கிடக்கும் வளியை விரவுதல் என்னும் முறையால் உள்வாங்கிக்கொள்கின்றன. இது நன்றாக நீந்தும் தன்மையற்றதாக உள்ளன. இவை தன் நகர்விக்கிற்கு நீரோட்டத்தையும் காற்றையும் சார்ந்து இருக்கின்றன. ஒரு இடத்தில் பல சொறிமுட்டைகள் கூட்டமாகக் காணப்பட்டால் அதை திரள்/படர்ச்சி என விவரிக்கிறோம். இக்கும்பலில் 100லிருந்து 1000வரையும் காணப்படும். அதிலும் பெட்டிச் சொறிமுட்டையின் கும்பலாக இருந்தால் மிகவும் தீங்கானவை/உயிர்ச்சேதம் விளைவிக்கூடியவையாக இருக்கும். இதில் ஆண் பெண் இரண்டும் முட்டை மற்றும் விந்துவை உற்பத்திச் செய்து நீரில் வெளியிடும். இவை எந்தவிதப் பாதுகாப்பின்றியும் அவை பருவச்சூழ்நிலை ஏற்படும் காலங்களில் குஞ்சுகள் தோன்றி வளர்ந்து ஒருப் புதுவுயிராக வடிவம்பெரும். இதன் வாழ்நாள் சில மணிநேரங்களில் தொடங்கி சராசரியாக ஆறுமாதக் காலமவரை நீளும். இதில் ஒரு சிற்றினம் இவற்றுள் மாறுபட்டு மரணத்தை ஒதுக்கி மீண்டும் தன் ஆயுளைத் தொடங்கும் தன்மையுள்ளதாக நம்பப்படுகிறது.
 
[[Chrysaora quinquecirrha.JPG|thumb|right|200px|]]
 
இதன் உணர்கொம்புகளின் கொத்தும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.
 
==வாழ்வியல்==
அவை ஞாலமுழுதும் உள்ள கடற்பகுதிகளில் மேற்தொட்டு அடிவரைக் காணப்படுகிறது. சமீபக் காலங்களில் இதன் எண்ணிக்கை கூடி ஆசுதிரேலிய அறிஞரான முனை. அந்தோனி ரிச்சார்ட்சன் தெறிவித்துள்ளார். இதற்கு நாம் மிகக் கூடிய அளவில் பிடிக்கும் மீன்களாலும் மற்றும் கடற்பரப்பில் நாம் புறந்தள்ளும் சாக்கடைக்கழிவு மற்றும் உரக்கழிவில் இருந்துப் பெறப்படும் ஊட்டத்தினாலும் தான் இவைகளின் எண்ணிக்கைக் கூடியுள்ளன என முனைவர் விவரிக்கிறார்.
 
[[File:Jellyfish aqurium.jpg|thumb|right|பசிபிக்கடலில் கூட்டமாகக் காணப்படும் சொறிமுட்டை வகை - ''கிரைசஓரா பச்செசன்சு'' ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.]]
 
சாதாரணமாக சொறிமுட்டையின் எண்ணிக்கைப் பருவத்தைப் பொருத்து மாறுபடுவதுண்டு அதிலும் அவைகளுக்கு கிடைக்கும் உணவைப்பொருத்து வேறுபடுவதுண்டு. அதுவும் அவ்வுணவுக்கிடைப்பது அரிதாகவும் காலச்சூழ்நிலையைச் சார்ந்தும் உள்ளன. வெப்ப மற்றும் கடலளவுக் கூடும் காலங்களில் குறிப்பாக வசந்தகாலம் மற்றும் கோடைக்காலங்களில் பாசி மற்றும் இதர உயிர்களின் இனப்பெருக்கம் கூடுவதால் இவைகளில் எண்ணிக்கையும் கூடும் அதுவும் இடத்தைப் பொருத்தே மாறுபடும். சப்பானில், நொமுராச் சொறிமுட்டை என்கிற இனம் இரண்டு மீ. நீளமும் அதே அளவுக்கு விட்டமுடையதாகவும் அவையின் எடை 200 கி.கி. மிகுந்தும் எண்ணிக்கையிலும் கூடி தொழிற்சார்ந்த மீனவர்களுக்கு பெரும் குழப்பத்தையும் இன்னலையும் விளைவிக்கின்றன. இதன் திரட்சி உலகின் பல பகுதிகளான கருங்கடல், காச்பியன் கடற்களில் பெரும் ஏற்றத்தைக் கண்டுவருகின்றன. எற்றும் மேற்குப் பகுதிகளான கடல்நீர்நிலைகளிலும் மற்றும் மெடிட்டேரினியன் கடற்பகுதிகளிலும் கடும் ஏற்றத்தைப் பெற்று வருகின்றன. இவ்வாறு சமீபக்காலங்களில் மிகக்கூடுதலாக திரள் உண்டாகிவருவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறது.
 
==சித்திர அணிவகுப்பு==
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/900798" இருந்து மீள்விக்கப்பட்டது