"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,961 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
சாதாரணமாக சொறிமுட்டையின் எண்ணிக்கைப் பருவத்தைப் பொருத்து மாறுபடுவதுண்டு அதிலும் அவைகளுக்கு கிடைக்கும் உணவைப்பொருத்து வேறுபடுவதுண்டு. அதுவும் அவ்வுணவுக்கிடைப்பது அரிதாகவும் காலச்சூழ்நிலையைச் சார்ந்தும் உள்ளன. வெப்ப மற்றும் கடலளவுக் கூடும் காலங்களில் குறிப்பாக வசந்தகாலம் மற்றும் கோடைக்காலங்களில் பாசி மற்றும் இதர உயிர்களின் இனப்பெருக்கம் கூடுவதால் இவைகளில் எண்ணிக்கையும் கூடும் அதுவும் இடத்தைப் பொருத்தே மாறுபடும். சப்பானில், நொமுராச் சொறிமுட்டை என்கிற இனம் இரண்டு மீ. நீளமும் அதே அளவுக்கு விட்டமுடையதாகவும் அவையின் எடை 200 கி.கி. மிகுந்தும் எண்ணிக்கையிலும் கூடி தொழிற்சார்ந்த மீனவர்களுக்கு பெரும் குழப்பத்தையும் இன்னலையும் விளைவிக்கின்றன. இதன் திரட்சி உலகின் பல பகுதிகளான கருங்கடல், காச்பியன் கடற்களில் பெரும் ஏற்றத்தைக் கண்டுவருகின்றன. எற்றும் மேற்குப் பகுதிகளான கடல்நீர்நிலைகளிலும் மற்றும் மெடிட்டேரினியன் கடற்பகுதிகளிலும் கடும் ஏற்றத்தைப் பெற்று வருகின்றன. இவ்வாறு சமீபக்காலங்களில் மிகக்கூடுதலாக திரள் உண்டாகிவருவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறது.
 
மிகுதியான சொறிமுட்டைகள் நீர்நிலைகளில் காணப்பட்டால் அது கண்டிப்பாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக மீன் பிடித்தல் மற்றும் அதன் விற்பனையுலகில் பல மாறுதல்களைச் சந்திக்க நேரிடும்.
 
சொறிமுட்டையின் எண்ணிக்கைக் கூடக்கூட அது சமச்சீர் சூழ்நிலை உருவாவதைத் தடுக்கிறது.
:* வேறு கடல் வாழ்வுயிரிகளுக்கு உணவுக்கிடைக்காமல் எல்லாவற்றையும் இவையே உண்ணும் நிலை ஏற்படும்.
:* கடற்கரைப் பகுதிகளில் குளிக்கச் செல்பவர்கள் கண்டிப்பாக அதன் தாக்குதளுக்கு உட்படுவது வாடிக்கையாகிவிடும்.
:* சுற்றுலாத்துறையும் கடும் வீழ்ச்சியடைய் வாய்ப்புள்ளது.
 
இவைகளின் எண்ணிக்கை கூடுதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற கடலுயிரிணங்களுக்கும் ஊறுதான். முதன்மையாக இதனால் தாக்கப்பட்டு உயிர்ச்சேதம் நீள வாய்ப்புள்ளது. சில உயிரிணங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்படலாம். சமீபத்தில் நமீபியா கடற்பகுதியில் நடந்த ஒன்று சிறந்து காட்டாகும். இதில் மிகுதியான மீன்பிடிப்பு மத்தியின வகை மீனை அக்கடற்கரைப் பகுதியிலிருந்தேக் குறைத்துவிட்டது. இதனால் இதை தனக்கு சாதகமான சூழ்நிலையாக மாறி சொறிமுட்டைகள் கூடுதல் உணவுக்கிடைக்கவே அது ஆக்கிரமிப்புச் செய்து மத்தியின மீன்களே முற்றிலும் அழிக்கப்பட்டு இதன் தலைமை மேலோங்கியுள்ளது.
 
==சித்திர அணிவகுப்பு==
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/900962" இருந்து மீள்விக்கப்பட்டது