சொறி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
==பண்புகள்==
சொறிமுட்டை/கடற்சொறி என்னும் உயிரினம் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இதில் சில கடல் மேற்புரத்திலும் சில கடலின் அடிப்பகுதியிலும் வாழக்கூடியது. அதன் அளவு பல வகையாகவும், சிறிய நகக் கனுவளவுக்கும் அதே ஒரு குளிர்சாதனப்பெட்டி யளவிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பெரும்பாலும் ஒளியூடுருவும் தன்மையுள்ளதாகவும், சில அடர் வண்ணங்களிலும் இருக்கின்றன. இதிற் சில இப்பண்புகளையுடைத்து செவ்வூதா, மஞ்சள் மற்றும் காவி நிறங்களிலும் காணப்படுகின்றன. இதன் உடலில் அதிகப்படியான நீர்த்தன்மையும் வழவழப்புத் தன்மையும் கூடியுள்ளதால் அறிஞர்கள் இதை [[வழும்பலைவிலங்குகள்]] பிரிவில் பகுத்துள்ளனர்.
[[படிமம்:Mike Johnston - Jelly Fish (by).jpg|thumb|right|200px|சொறிமுட்டை]]
 
வரிசை 31:
 
இதன் உணர்கொம்புகளின் கொத்தும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.
==வரலாறு==
சொறிமுட்டைகள் பல காலங்களிலாக அறிஞர்களால் ஆயப்பட்டு வந்தாலும் இது பெரிதும் அறிவியல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்டோபர் 2007 ஆம் ஆண்டே. அப்போதுக் கண்டுபிடிக்கப்பட்ட சொறிமுட்டையின் புதைப்படிமங்கள் அதன் வரலாறை உலகிற்கு உணர்த்தியது. அவை 205 மில்லியன் ஆண்டுகளுக்குப் பழைமையானவை என்பது அறிவியல் உலகில் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்றும் பல அறிய புதிய வகை சொறிமீன்கள் கண்டுப்பிடித்தவன்னம் இருக்கின்றன.
 
2004 ஆம் ஆண்டு அறிஞர்கள் மூன்று புதிய வகை இருகாண்ட்சி குடும்பச் சொறிமுட்டைகளைக் கண்டறிந்தனர். இது இவர்களுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது. இது மேற்கு ஆசுதிரேலியாவில் கண்டறியப்பட்டது. இதில் வியப்பு என்னவாயின் கண்டுப்பிடிக்கப்பட்டவையிலேயே இது தான் மிகக்கொடிய நச்சுடையதாகவும், அதாகப்பட்டது நீரில் இருக்கும் போதும் நீரில் இல்லாத போதும். அதே ஆண்டில் ஒரு இனவுற்பத்தித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
1952 ஆம் ஆண்டு இருகாண்ட்சி நோய் என்பது சொறிமுட்டை கொத்துதலில் வரும் நோய் என ஆசுதிரேலியாவைச் சேர்ந்த யூகோ பிலிக்கர் என்பவர் விளக்கினார். மேலும் தாக்கப்பட்ட நபர் ஒரு மணி நேரத்திற்குள்ளாக வாந்தி, பின் முதுகில் மிகுந்த வலியும் மார் வலியும் ஏற்படும் எனவும் விவரித்தார். 1964 ஆம் ஆண்டு சாக் பார்னசு என்னும் அறிஞர் சிறிய வகை சொறிமுட்டைத் தாக்கினால் நோயும் மரணமும் நேரும் என்பதை நிருபித்தார். இதை அவர் தன் மேலும் தன் மகன் மீதும் சோதித்து ஒரு மருத்துவரின் துணையுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்.
 
சில சொறிமுட்டையின் மின்னும் தன்மையை கடந்த சில ஆண்டுகளாக அறிஞர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒரு காலத்தில் இதன் தாக்கத்திற்கு மருந்துக் கண்டறிந்துச் சிகிச்சையளிக்கும் அளவுக்கு வளரும்.
==வாழ்வியல்==
[[படிமம்:Schleiden-meduse-2.jpg|thumb|right|சொறிமுட்டையின் குடை வாழ்வு சுழற்சு, 1-8:பிளானுக்குடம்பி மற்றும் வளர்சிதைமாற்றம் நடந்து பாலிப்பாக உருமாறல். 9-11: ஒடுங்கி (துண்டாகி இனப்பெருக்கம்) எப்பிக்குடம்பியாக மாறல். 21- 14: எப்பிரென் என்னும் பருவத்திலிருந்து முதிர்ந்த/நன்கு வளர்ச்சியடைந்த சொறிமுட்டை]]
"https://ta.wikipedia.org/wiki/சொறி_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது