"பேச்சு:கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,131 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
(→‎தலைப்பு பற்றி: புதிய பகுதி)
 
''சொறிமுட்டை'' எனும் பெயர் வழக்கில் உள்ளது போல பெயர்க்காரணம் எழுதப்பட்டுள்ளது. இது வழக்கில் இருந்தால் சான்று எதுவும் உள்ளதா? கழகப் பேரகரமுதலியில் [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:4526.tamillex சொறி] என அழைகப்படுவதாகத் தந்துள்ளார்கள். ''முட்டை'' எனும் ஒட்டு இது ஏதோ ஒரு வகை முட்டை என்பது போல மயக்கம் தருவதாக உள்ளது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:38, 16 அக்டோபர் 2011 (UTC)
 
தமிழில் வழக்கத்தில் உள்ளதையே பெயராகக் கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் செல்லி மீன் என இருப்பதால் அதற்கு மாற்றாக மொழிப்பெயர்த்து தமிழிலும் அழைப்பது எங்ஙனம் பொருந்தும். காட்டாக Sea cow என்று அழைக்கப்படும் Dugong இன் தமிழ்ப்பெயர் கடற்பன்றி என்பதாகும். ஆனால் இன்று ஆங்கிலத்தில் என்ன வழங்குகின்றனரோ அதற்கு மாற்றக அப்படியே மொழிபெயர்த்து கடற்பசு என அழைப்பது பொருந்தாது என்பது என் தாழ்மையானக் கருத்து. தமிழகக் கடற்பகுதியில் காணப்படும் பெரும்பான்மையான உயிரினங்களுக்கு தமிழ்ப்பெயர் இருக்கிறது. இது இக்காலத்தில் மறைக்கப்பட்டுள்ளது அவ்வளவே. ஏன் பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கும் டால்பின் என்னும் பாலூட்டிக்கே தமிழில் பொமிகரா (Pomigera) என்னும் பெயர் 1850 முதல் மேற்கோள் உள்ளது. இந்திய மொழிகளிலேயே டால்பினின் பெயருக்கு மாற்று மொழியில் மேற்கோளிடப்பட்ட ஒரே மொழி தமிழாகும். உங்களுக்கு ஐயமிருப்பின் மேலே குறிப்பிட்ட அங்கிலப்பெயரை கூகுள் தேடலில் இட்டுப்பாருங்கள். முன்பு இதற்கான மேற்கோள் கொடுக்கப்படவில்லை. இப்போது கொடுத்திருக்கிறேன். மேலும் மேற்கோள் கொடுக்காமல் கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இன்னும் பதிவேற்றம் மீதம் உள்ளது.. அது கழிந்தவுடன் படிப்படியாக அதன் மேற்கோள்களையும் இடுகிறேன். அதற்கு சில காலம் பிடிக்கும். நன்றிகளுடன். --[[பயனர்:Singamugan|சிங்கமுகன்]] 17:51, 16 அக்டோபர் 2011 (UTC)
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/901293" இருந்து மீள்விக்கப்பட்டது