"முதலாம் ஜான் பால் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெனிஸ் நகரில் அல்பினோ லூச்சியானி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், ஓர் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைமாவட்ட குருமடத்தில் இணைந்த இவர், உயர் குருமடத்தில் பயின்று கொண்டிருந்த போது இயேசு சபையில் இணைய விரும்பினார். ஆனால் அக்குருமட அதிபரோ அதற்கு அனுமதி தர மறுத்ததால், மறைமாவட்ட குருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு 1935ல் குருவானார்.
 
தான் படித்த அதே குருமடத்தில் பேராசிரியராகவும் துணை அதிபராகவும் பணியில் இணைந்த இவர், [[உரோம்]] நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற விரும்பி அங்கு படிக்கச் செல்ல விரும்பினார். ஆனால் இவர் படிக்கும்போதே கல்வி கற்பிக்கவும் வேண்டுமென குருமட அதிகாரிகள் விரும்பினர். கிரகோரியன் பல்கலைக்கழகமோ, இவர் உரோம் நகரில் வந்து ஓர் ஆண்டாவது கல்லூரியில் படிக்க வேண்டும் என்றது. இவ்வளவு முக்கிய பேராசிரியரை இழக்க விரும்பாத வெனிஸ் குருமடத்திற்காக இந்தச் சிக்கலில் நேரடியாக தலையிட்டு, அங்கேயிருந்தே முனைவர் பட்டப்படிப்பை உரோம் பல்கலைக்கழகத்தில் தொடர சிறப்பு அனுமதி அளித்தார் திருத்தந்தை 12ம் பயஸ்.
 
==திருத்தந்தையாக==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/901833" இருந்து மீள்விக்கப்பட்டது