"கலிலேயக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: el:Θάλασσα της Γαλιλαίας)
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களில் இந்த ஏரி '''கலிலேயக் கடல்''' என்றும் '''திபேரியக் கடல்''' என்றும் அழைக்கப்படுகிறது (காண்க: ''கலிலேயக் கடல்'': [[மத்தேயு|மத்தேயு 4:18]], [[மாற்கு|மாற்கு 1:16]], [[யோவான்|யோவான் 6:1]]; ''திபேரியக் கடல்'': [[யோவான்|யோவான் 6:1; 21:1]]).
 
''கெனசரேத்து ஏரி'' என்னும் பெயர் [[லூக்கா நற்செய்தி|லூக்கா 5:1இல்]] வருகிறது. மேலும், [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] பல பகுதிகளிலும் இப்பெயர் ''கினரேத்துக் கடல்'' (Kinnereth/Chinnereth) என்றுளது (காண்க: [[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை 34:11]], [[யோசுவா (நூல்)|யோசுவா 13:27]]).
 
''கின்னர்'' என்னும் எபிரேயச் சொல்லுக்கு ''யாழ்'' என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.
[[இயேசு]] பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது.
 
[[இயேசு]] தமது முதல் [[திருத்தூதர்|திருத்தூதர்களை]] அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர் ([[மத்தேயு|மத்தேயு 4:18-22]]; [[மாற்கு|மாற்கு 1:14-20]]; [[லூக்கா நற்செய்தி|லூக்கா 5:1-11]]). இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவும்]] அவர்தம் உடன்பிறப்பு [[அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயாவும்]], மற்றும் [[யோவான்]], அவர்தம் உடன்பிறப்பு [[யாக்கோபு|யாக்கோபும்]] ஆவர்.
 
கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக [[மத்தேயு|மத்தேயு நற்செய்தியாளர்]] குறித்துள்ளார் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 5:1-7:28]]). இது ''மலைப் பொழிவு'' (Sermon on the Mount) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
===அதிசய மீன்பாடு புதுமை===
 
[[இயேசு]] தம் அதிசய வல்லமையைப் பயன்படுத்தி இருமுறை பெருமளவில் மீன்பாடு நிகழச் செய்தார் என்று [[நற்செய்தி|நூல்கள்]] கூறுகின்றன. முதல் [[இயேசுவின் புதுமைகள்|புதுமையை]] [[லூக்கா நற்செய்தி|லூக்காவும்]] இரண்டாம் புதுமையை [[யோவான்|யோவானும்]] குறித்துள்ளனர்.
 
'''லூக்கா 5:1-11''': ஒருநாள் [[இயேசு]] கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர், [[பேதுரு (திருத்தூதர்)|சீமோன்]] என்பவரின் படகில் [[இயேசு]] ஏறி அமர்ந்து அதில் அமர்ந்தவாறே கற்பித்துக்கொண்டிருந்தார். படகை ஏரியின் ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய் மீன்பிடிக்க வலைகளைப் போடுமாறு [[இயேசு]] சீமோனிடம் கூறினார். இரவு முழுதும் வலைவீசியும் மீனொன்றும் அகப்படவில்லை என்று [[பேதுரு (திருத்தூதர்)|சீமோன்]] கூறிப்பார்த்தார். என்றாலும், ''உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்று சொல்லி, அவரும் அவரோடுகூட இருந்தவர்களும் ஏரியில் வலைகளை வீசினார்கள். அதிசயமான விதத்தில் பெருந்திரளான மீன்கள் வலைகளில் அகப்பட்டன; வலைகளும் கிழியத் தொடங்கின. வேறு மீனவர்களும் துணைக்கு அழைக்கப்பட்டனர். படகு மூழ்கும் அளவுக்கு மீன்கள் கிடைத்தன. வியப்பும் அச்சமும் மேலிட, சீமோனும் அவர்தம் உடனுழைப்பாளரும் இயேசுவின் கால்களில் விழுந்தார்கள். இவ்வாறு [[இயேசு]] அவர்களைக் கெனசரேத்து ஏரிக்கரையில் தம் சீடர்களாகச் சேர்த்துக்கொண்டார்.
'''யோவான் 21:1-14''': [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|சாவினின்று உயிர்பெற்றெழுந்த இயேசு]] திபேரியக் கடல் அருகே தம் சீடருக்குத் தோன்றியதை [[யோவான்]] பதிவுசெய்துள்ளார். இரவு முழுதும் வலைவீசியும் மீன் அகப்படாமல் இருந்தது. ஏரிக் கரையில் நின்ற [[இயேசு]] படகிலிருந்த [[பேதுரு (திருத்தூதர்)|சீமோனையும்]] மற்றவர்களையும் நோக்கி, ''படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்றார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. வலையில் 153 மீன்கள் இருந்தன.
 
[[இயேசுவின் புதுமைகள்|அதிசய மீன்பாடு]] நிகழ்ந்தது இரு தடவை குறிப்பிடப்பட்டாலும் ஒரே நிகழ்ச்சியைத்தான் விவரிக்கின்றன என்று விவிலிய அறிஞர் கருதுகின்றனர். இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலும் அவர் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த]] பின்னும் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதன் வழியாக [[இயேசு]]விடம் கடவுளின் வல்லமை துலங்கியது என்றும், இயேசுவின் பணியை அவர்தம் சீடர்கள் தொடர்ந்து ஆற்றி, உலக மக்கள் எல்லாரையும் (''153 மீன்கள்'') கடவுளின் ஆட்சியில் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் இயேசு அப்பொறுப்பைச் சீடர்களுக்கு அளித்தார் என்றும் [[புதிய ஏற்பாடு]] கூறுகின்றது. இதையே [[லூக்கா நற்செய்தி|லூக்காவும்]] [[யோவான்|யோவானும்]] வெவ்வேறு விதங்களில் பதிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
 
===பிற புதுமைகள்===
இயேசு கலிலேயக் கடல்மீது நடந்தார் என்னும் செய்தியை நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளனர் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 14:26-33]], [[மாற்கு|மாற்கு 4:45-52]], [[யோவான்|யோவான் 6:16-21]]).
 
கலிலேயக் கடலில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கிய நிகழ்ச்சியையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 8:23-27]], [[மாற்கு|மாற்கு 4:35-41]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா 8:22-25]]).
 
[[Image:Rembrandt Christ in the Storm on the Lake of Galilee.jpg|thumb|right|இயேசு கலிலேயக் கடலில் புயலை அடக்குகிறார். ஓவியர்: ரெம்ப்ராண்ட். ஆண்டு: 1633.]]
[[Image:Tilapia zilli Kineret.jpg|thumb|திபேரியாஸ் உணவகத்தில் பரிமாறப்படும் திலேப்பியா (''புனித பேதுரு மீன்'').]]
 
கலிலேயக் கடலருகில் பாலைநிலத்தில் இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தியும் [[நற்செய்தி|நற்செய்தியில்]] காணப்படுகிறது (காண்க: [[மத்தேயு|மத்தேயு 14:13-21]], [[மாற்கு|மாற்கு 6:30-44]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா 9:10-17]], [[யோவான்|யோவான் 6:1-14]]).
 
==இயேசுவின் காலத்திற்குப் பிந்திய வரலாறு==
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/902941" இருந்து மீள்விக்கப்பட்டது