திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
 
==புனித லூக்கா எழுதிய அன்னை மரியா ஓவியம்==
[[Image:Vladimirskaya.jpg|thumb|left|[[லூக்கா (நற்செய்தியாளர்)|புனித லூக்கா]] வரைந்ததாகக் கருதப்படும் விளாடிமீர் நகர மரியா திருவோவியம்]]
இயேசுவின் வாழ்க்கையையும் போதனையையும் எடுத்துரைக்கின்ற நான்கு [[நற்செய்தி]] நூல்களில் ஒன்றின் ஆசிரியர் [[லூக்கா நற்செய்தி|புனித லூக்கா]]. அவரே [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலுக்கும் ஆசிரியர். இவர் திருத்தூதராகிய [[பவுல் (திருத்தூதர்)|புனித பவுலின்]] உடனுழைப்பாளராகச் சென்று நற்செய்தி பரப்பினார். தம் நற்செய்தி நூலில் [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியாவைப்]] பற்றி பல தகவல்களைத் தருகின்றார்.
 
[[லூக்கா (நற்செய்தியாளர்)|புனித லூக்கா]] அன்னை மரியாவை நேரடியாகப் பார்த்து, அவரின் திருவோவியத்தை வரைந்தார் என்னும் உறுதியான ஒரு மரபுச் செய்தி உள்ளது. இம்மரபுச் செய்தி கிபி 5ஆம் நூற்றாண்டில் எழுந்தது.
 
தெயோதோருஸ் லெக்டோர் (Theodorus Lector) என்னும் கிறித்தவ அறிஞர் 6ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய "திருச்சபை வரலாறு" என்னும் நூலில்<ref>Theodorus Lector, ''History of the Church'', 1:1</ref> கூறுவது: "பேரரசர் இரண்டாம் தெயோடோசியுசின் (இறப்பு: கிபி 460)மனைவியாகிய யூதோக்கியா (Eudokia) என்பவர் ''திருத்தூதர் லூக்காவால் வரையப்பட்ட'' "இறைவனின் அன்னை" என்னும் மரியாவின் திருவோவியத்தை (''Hodegetria'' = "வழிகாட்டுபவர்") [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] பேரரசர் அர்க்காடியுஸ் என்பவரின் மகளாகிய புல்க்கேரியாவுக்கு (Pulcheria) அனுப்பிவைத்தார்." <ref>Nicephorus Callistus Xanthopoulos எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி பிற்காலச் செருகலாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது