உயிர்ச்சத்து பி12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[உயிர்ச்சத்து பி12]] நீரில் கரையும் ஒரு [[உயிர்ச்சத்து]] ஆகும். இது [[மூளை]] மற்றும் [[நரம்புத் தொகுதி|நரம்பு]] அமைப்பின் இயல்பான செயல்பாட்டிலும் [[குருதி]] உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது எட்டு [[உயிர்ச்சத்து பி]] வகைகளில் ஒன்றாகும். உடலின் ஒவ்வொரு [[உயிரணு]]வின் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றத்திலும்]] பொதுவாக பங்குபெறுகிறது.
 
''வைட்டமின் பி12'' கட்டமைப்பு ரீதியாக மிகவும் சிக்கலான உயிர்ச்சத்து என்பதோடு [[உயிர்வேதியியல்]] ரீதியாக மிகவும் அபூர்வமான [[தனிமம்|தனிமமான]] [[கோபால்ட்]]டை கொண்டிருக்கிறது. வைட்டமினது அடிப்படை கட்டமைப்பை உயிரியல்தொகுப்பு செய்வது [[பாக்டீரியா]]க்கள் மூலம் மட்டும் தான் முடியும். ஆனால் வைட்டமினின் வெவ்வேறு வடிவங்களுக்கு இடையில் மாற்றுவது [[மனிதர்|மனித]] உடலில் செய்யப்பட முடியும். வைட்டமினின் ஒரு பொதுவான செயற்கை வடிவமான '''சயனோகோபாலமின்''' இயற்கையாக நேர்வதில்லை. ஆனால் இதன் ஸ்திரத்தன்மை மற்றும் குறைந்த விலையின் காரணமாக, இது பல்வேறு மருந்து தயாரிப்பகங்களிலும் அது தொடர்பான துணையளிப்புகளிலும், உணவுடன் சேர்க்கப்படும் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உடலில் மெத்தில்கோபாலமின் மற்றும் அடினோசில்கோபாலமின் ஆகிய உடலியல் வடிவங்களாக இது மாற்றப்பட்டு மிகக் குறைந்த அடர்த்தியில் சயனைடை விட்டுச் செல்கிறது. மிக சமீபத்தில், ஹைட்ராக்ஸோகோபாலமின், மெத்தில்கோபாலமின் மற்றும் அடினோசில்கோபாலமின் ஆகியவை கூடுதல் விலையுடனான மருந்து தயாரிப்புகளிலும் உணவுச் சேர்க்கைகளிலும் காணப்படடுகிறது. இவற்றினை பயன்படுத்துவது இப்போது விவாதத்திற்குரியதாய் இருக்கிறது.
 
வரலாற்றுரீதியாக, பித்தபாண்டு (சோகை) நோயுடன் கொண்டிருந்த உறவின் மூலம் தான் வைட்டமின் பி12 கண்டுபிடிக்கப்பட்டது, இது வயிற்றில் உள்ளக காரணியை சுரக்கும் சுவர் செல்களை (parietal cells ) அழிக்கும் ஒரு சுயதாங்குதிறன் கொண்ட நோயாகும். உள்ளக காரணி பி12 வைட்டமினின் இயல்பான உறிஞ்சலுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே உள்ளக காரணி பற்றாக்குறை என்பது, வாழழி(பெர்னீசியசு) சோகை நோயில் காண்பது போல, வைட்டமின் பி12 பற்றாக்குறைக்கு காரணமாகிறது. அதன்பின், இன்னும் பல வைட்டமின் பி12 பற்றாக்குறையின் நுண்ணிய வகைகளும் அவற்றின் உயிர்வேதியியல் விளைவுகளும் தெளிவுபடுத்தப் பெற்றிருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_பி12" இலிருந்து மீள்விக்கப்பட்டது