துப்ரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அசாமில் உள்ள மாவட்டம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''துப்ரி மாவட்டம்''' [[இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:37, 21 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்




துப்ரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும்.இது அருகில் உள்ள கோஆல்பரா மாவட்த்தில் இருந்து, 1 ஜூலை 2001 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[1]

அமைப்பு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக துப்ரி நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2838 சதுர கிலோமீடராகும்[2]2011 ஆம் ஆண்டின் கணக்கு படி இதுவே இந்த மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநில மாகும் .[3]இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கோக்ரஜர் மாவட்டமும், கிழக்குப் பகுதியில் போங்கைகாவொன் மாவட்டமும், தெற்குப் பகுதியில் மேகாலயா மாநிலமும்,மேற்குப் பகுதியில் பங்களாதேஷ் நாடும்,எல்லையாக அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

இந்த மாவட்டத்திற்கு துப்ரி என்ற பெயர் சந்த் சடாகர் என்ற புராண கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான நெட்டை துபுனி, பிரம்மபுத்ர ஆற்றின் கரையில் துணி துவைக்கும் ஒரு கல்லின் பெயர் என்று கூறப்படுகிறது. இன்றும் இந்த இடம் நெட்டை துபுனிர் படித்துறை என்று கூறப்படுகிறது.

இதன் பெருமைகள்

துப்ரி மாவட்டம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் வருகை புரிந்த ஒரு இடமாகும். சீக்கிய மத குருவான குரு நானக் தேவ், ஸ்ரீமந்த சங்கரதேவா, குருதெஹ் பகதூர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கோபிநாத் போர்டோலி போன்ற சான்றோர்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு துப்ரி, பிளாஸ்பரா, சல்மரா, ஹட்சிங்கிமரி, மன்கசார், கெளரிபூர், மற்றும் கோலக்கஞ். இந்த மாவட்டம் ஏழு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[4]

மக்கள்தொகை ஆய்வு

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் பேர் உள்ளனர். 1,948,632 பேர் உள்ளனர். 24.4 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 952 ஆகவும், மக்களின் கல்வியறிவு 59.36 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 1171 ஆகவும் உள்ளது.[3]

சுற்றுலாத் தளங்கள்

இந்த மாவட்டத்தில் உள்ள குருத்வார ஸ்ரீ குரு தெஹ் பகதூர் சாஹிப், மகாமாயா கோவில், பண்பாரி மசூதி போன்றவை மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களாகும்.[5]Chakrashila Wildlife Sanctuary, Florican Garden and Panchpeer Dargah.1994 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் சக்ரஷீலா வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.[6]

மேற்கோள்கள்

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. 3.0 3.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  4. "List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up" (PDF). Chief Electoral Officer, Assam website. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  5. http://www.indiainfoweb.com/assam/panbari/ Panbari Mosque at Dhubri
  6. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Assam". பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்ரி_மாவட்டம்&oldid=905040" இலிருந்து மீள்விக்கப்பட்டது