பார்முலா 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 16:
}}
[[படிமம்:Formula one.jpg|thumbnail|right|300px|2003 அமெரிக்க கிராண் ப்ரி]]
'''பார்முலா 1 (Formula 1 or F1)''' ஆண்டு தோறும் நடைபெறும் [[பார்முலா பந்தயங்கள்|தானுந்து பந்தயத்]] தொடராகும். இப்பந்தயங்கள் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA (Fédération Internationale de l'Automobile) (அகில உலக தானுந்து கூட்டமைப்பு) எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோரும் சுமார் 11 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இரண்டு ஓட்டுனர்கள் பங்கு கொள்வர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுனர் பெறும் இடத்தைப் பொறுத்து அவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். தொடர் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் ஓட்டுனருக்கு ஓட்டுனர் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். 2010ஆம் ஆண்டின் ஓட்டுனர் பட்டத்தை ஜெர்மனியின் [[செபாஸ்டியன் வெட்டல்]] கைப்பற்றினார். அணிக்கான வெற்றிப் பட்டத்தை ரெட் புல் (Red Bull Racing) அணி வென்றது.
 
பார்முலா-1 தானுந்துகள் 360 கிமீ/மணி வேகத்தை அதிகபட்சமாக எட்டும். மேலும் அதன் எஞ்சின்கள் 18000 சுழற்சிகள்/நிமிடம் (அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சுழல் வேகம்) சுழல்வேகத்தை எட்டக்கூடியவை. போட்டியில் பங்குபெறும் தானுந்துகள் 5g அளவுக்கு பக்கவாட்டு முடுக்கத்தை எட்டக் கூடியவை. தானுந்துகளின் செயல்திறன் அவற்றின் [[காற்றியக்கவியல்]] அமைப்புகள், [[மின்னணுவியல்]], வட்டகை ஆகியவற்றைப் பொருத்ததாகும்.
 
பார்முலா-1 தானுந்து போட்டிகள் உலக அளவில் 600 மில்லியன் தொலைக்காடசி பார்வையாளர்களால் பார்க்கப்படுகின்றன. இப்போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகின்றன. இதன் வருடாந்திர செலவுப் பட்டியலும் நடத்தும் அமைப்பினுக்கான அரசியலும் ஊடகங்களால் பெருமளவு கவனிக்கப்படுகின்றன. இத்தகைய கவனிப்பும் இதன் புகழும் இப்போட்டிகளுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கின்றன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பார்முலா_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது