சிலம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Statue of Kannagi.jpg|thumb|100px]]'''சிலம்பு''' என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். [[கண்ணகி]]யின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, [[இளங்கோவடிகள்]] [[சிலப்பதிகாரம்]] என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் [[தமிழ்த் தாய்|தமிழ்த் தாயின்]] கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறக்காணலாம்.
 
சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது. அம்பலத்தில் ஆடுகின்ற [[நடராசர்|நடராசப் பெருமானும்]] தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. 'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப்பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.
1,767

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/905939" இருந்து மீள்விக்கப்பட்டது