"லூர்து அன்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|shrine = [[லூர்து அன்னை திருத்தலம்]], லூர்து, பிரான்சு
}}
'''தூய லூர்து அன்னை''' என்ற பெயர், [[மரியாமரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] [[பிரான்சு]] நாட்டின் [[லூர்து]] நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை [[புனிதர்|புனித]] [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத் சூபிரூஸ்]] என்ற பெண்ணுக்கு அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.<ref>[http://www.catholic.org/clife/mary/app.php?id=1 Catholic Online: Apparitions of Our Lady of Lourdes First Apparition]</ref> இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியும் விளங்குகிறது.
 
==மரியாவின் காட்சிகள்==
[[பிரான்சு]] நாட்டின் [[லூர்து]] நகரில் பிறந்தவர் [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத் சூபிரூஸ்]]. இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858 பிப்ரவரி 11ந்தேதி இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.
 
[[மரியாமரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும் முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒரு [[செபமாலை]] வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.<ref>L Laurentin, Lourdes, Marienlexikon, Eos Verlag, Regenburg, 1988, 161</ref><ref>Harris, Ruth. ''Lourdes'', Allen Lane, London, 1999, p 4</ref>
 
பெர்னதெத் அன்னையின் முதல் காட்சியைக் கண்டபோது, மரியா அவரை மேலும் சில நாட்கள் அதே இடத்திற்கு வரச் சொன்னார். மரியாவின் வார்த்தைகளை ஏற்று, பெர்னதெத்தும் அங்கு சென்றார். பிப்ரவரி 18ந்தேதி, மரியாவைக் கண்டு பெர்னதெத் பரவச நிலையில் இருந்ததை அவரோடு சென்றவர்கள் கண்டனர்.<ref>Laurentin 161</ref> ஒரு காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெர்னதெத் அதை பங்கு குருவிடம் சொன்ன போது, அவர் அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கூறினார்.
 
[[Image:Sanctuary NDL 1.jpg|thumb|240px|லூர்து அன்னை பேராலயம், [[பிரான்சு]]]]
[[திருத்தந்தை]] [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|9ம் பயஸ்]] 1854 டிசம்பர் 8ந்தேதி, "[[மரியாமரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]], தான் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், சிறப்பு சலுகையினாலும், மனித குலத்தின் மீட்பராம் இயேசுவின் பேறுபலன்களினாலும் சென்மப் பாவத்தின் கறைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் [[கத்தோலிக்க திருச்சபை|திருச்சபை]]யின் போதனை இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையாகும். எனவே, இறைமக்கள் இதில் என்றும் தளராத உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும்" என்று கூறி, மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதை உறுதி செய்யும் வகையிலே மரியா லூர்து நகரில் காட்சி அளித்தார்.
 
==லூர்து பேராலயம்==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/909210" இருந்து மீள்விக்கப்பட்டது