மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 50:
[[தூய ஆவி]]யாரின் வல்லமையால் [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] மனிதராக பிறப்பது, கடவுளின் திட்டமாக இருந்தது. முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்த [[எலிசபெத்]]துக்கு உதவிசெய்ய [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] சென்றார். அப்போது எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டராய் மரியாவை நோக்கி, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" என்று உரைத்தார்.<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:39-45</ref> அதுவே, மங்கள வார்த்தை செபத்தின் இரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ளது.
 
===வேண்டுதல் பகுதி===
[[திரித்துவம்|மூவொரு இறைவனுக்கு]] மிகவும் பிரியமானவராகிய மரியாவைத் தொடக்க காலம் முதலே [[கத்தோலிக்க திருச்சபை]] போற்றி பெருமைப்படுத்தி வந்திருக்கிறது. பல்வேறு ஆபத்தான சூழல்களிலும் அவரது உதவியை வேண்டி, இறைவனின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்திருக்கிறது. அவ்வாறே கடவுளுக்கு உகந்தவர்களாக வாழவும் இறக்கவும், மரியன்னையின் உதவியைப் பெறவே திருச்சபை, "புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்" என்று மன்றாடுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது