சாலமோனின் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
வரிசை 1:
[[Image:Solomon'sTempleEast.png|thumb|சாலமோனின் கோவில் - குறுக்குவெட்டுப் பார்வை. மேலே: மேற்குப் பார்வை. கீழே: கிழக்குப் பார்வை.]]
'''சாலமோனின் கோவில்''' (''Temple of Solomon'') என்பது பண்டைய [[எருசலேம்]] நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நெபுகத்னேசர் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Temple_of_Solomon சாலமோனின் கோவில்.]</ref>
 
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்படி]], இக்கோவில் [[இசுரயேல்|இசுரயேலின்]] மன்னராக ஆட்சிசெய்த [[சாலமோன்]] காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.<ref name="Stevens">Stevens, Marty E. [http://books.google.co.uk/books?id=0P9gcFR1MSAC&dq=Temples,+tithes,+and+taxes:&source=gbs_navlinks_s Temples, tithes, and taxes: the temple and the economic life of ancient Israel], pg. 3. Hendrickson Publishers 2006, ISBN 1565639340</ref>
 
ஒருவேளை, [[இசுரயேல்|இசுரயேலர்]] [[எருசலேம்|எருசலேமைக்]] கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.<ref>''Peake's commentary on the Bible''</ref>
 
 
==யாவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்==
{{main|எருசலேம் கோவில்}}
ஒருங்கிணைந்த [[இசுரயேல்]] அரசு "தெற்கு அரசு" (யூதா) என்றும், "வடக்கு அரசு" (இசுரயேல்) என்றும் கிமு 10ஆம் நூற்றாண்டில் பிரிந்ததைத் தொடர்ந்து அக்கோவில் இசுரயேலரின் கடவுளாகிய "யாவே" கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலின் உள்ளே "உடன்படிக்கைப் பேழை" என்னும் பெட்டகமும் வைக்கப்பட்டது.<ref>Achtemeier, Paul J. and Roger S. Boraas. The HarperCollins Bible Dictionary. San Francisco, CA: HarperSanFrancisco, 1996. p. 1096.</ref>
 
==அகழாய்வுச் சான்றுகள்==
வரி 74 ⟶ 73:
==சாலமோன் கோவிலின் கட்டட அமைப்பு==
[[File:SolomonsTemple.png|thumb|right|300px|விவிலிய அடிப்படையில் சாலமோனின் கோவில் தோற்ற வரைவு.]]
மெசபொத்தாமியாவிலும் பண்டைய எகிப்திலும் பெனீசியர் காலத்திலும் இருந்த கோவில்களின் அமைப்பு அகழ்வாய்வுகள் வழியாகத் தெரிகிறது. ஆனால், அவற்றுள் எந்த ஒரு கோவிலையும் அப்படியே தழுவாமல், ஆனால் பலவற்றிலிருந்தும் பல அம்சங்களைத் தெரிந்து, அவற்றை இசைவுறப் பொருத்தி சாலமோன் கோவில் கட்டப்பட்டது.
 
சாலமோன் கோவிலின் பொது கட்டட அமைப்பு எகிப்து திருத்தலங்களின் அமைப்பைப் பெருமளவு ஒத்திருக்கிறது.<ref name=Finkelstein>''[[The Bible Unearthed]]'' என்னும் நூலை எழுதிய Finkelstein என்பவர் கருத்துப்படி, சாலமோனின் கோவிலின் அமைப்பு அக்காலத்து பெனீசிய கோவில்களைப் பெரிதும் ஒத்துள்ளது. பெனீசியர் வரைந்த வரைவைக் கொண்டு சாலமோனின் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாய்வுச் சான்றுகள் உள்ளன.</ref>
வரி 96 ⟶ 95:
கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலையும் நிறுத்தப்பட்டன. அவையும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டன (2 குறிப்பேடு 4:22). நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் நெய்யப்பட்ட ஒரு திரை தொங்கவிடப்பட்டது (2 குறிப்பேடு 3:14). கருவறைக்கு சாளரங்கள் இல்லை (காண்க: 1 அரசர்கள் 8:12). அது "கடவுள் தங்கி வாழும்" இடம் என்ற வணக்கத்துக்குரிய தலம் ஆனது.
 
கருவறையில் தொங்கிய திரைச்சீலையின் நிறங்களும் பொருளுடைத்தன. நீலம் வானத்தைக் குறிக்கவும், கருஞ்சிவப்பு பூமியைக் குறிக்கவும், அவ்விரு நிறங்களின் கலப்பாகிய ஊதா விண்ணகமும் மண்ணகமும் சந்திப்பதைக் குறிக்கவும் அடையாளமாயின.
 
==சால்மோனின் கோவிலில் அமைந்த "தூயகம்"==
 
கோவிலின் இப்பகுதி "ஹெக்கால்" (''Hekhal'') என்று அழைக்கப்பட்டது. அது "திருவிடம்" அல்லது "தூயகம்" என்னும் பொருள்தரும். இப்பகுதிக்கு "மையப்பகுதி" அல்லது "கோவில்" அல்லது "அரண்மனை" என்றும் பொருள் உண்டு. அதன் அகலமும் உயரமும் கருவறையின் அளவுக்கு ஒத்திருந்தன. நீளம் மட்டும் 40 முழமாக இருந்தது (காண்க: 1 அரசர்கள் 6:17).
 
கோவிலின் தூயகம் விலையுயர்ந்த தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. அப்பலகைகளும் பொன்னால் பொதியப்பட்டன. தூயகத்தின் மேல், பேரீச்சை,மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன (காண்க: 2 குறிப்பேடு 3:5). அவற்றின் மீதும் பொன்முலாம் பூசப்பட்டது. பொற்சங்கிலிகள் தூயகத்தைக் கருவறையிலிருந்து பிரித்தன.
 
தூயகத்தின் சுவர்களின்.உட்புறம் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் மூடப்பட்டன. தூயகத்தின் கீழ்த்தளம் நூக்கு மரப்பலகைகளால் பாவப்பட்டது. தூயகட்த்தின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும், விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை (காண்க: 1 அரசர்கள் 6:15-18).
 
==சால்மோன் கோவிலின் "முன் மண்டபம்"==
 
இப்பகுதி "உலாம்" (''Ulahm'') என்று அழைக்கப்பட்டது. இது கோவிலின் நுழைவாயிலுக்கு முன்னால், கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது (காண்க: 1 அரசர்கள் 6:3; 2 குறிப்பேடு 3:4; 9:7). இப்பகுதியின் அளவைகள்: நீளம் = 20 முழம் (கோவிலின் அகலத்தைப் போல்); அகலம் = 10 முழம் (கோவிலுக்கு முன்னால்) (காண்க: 1 அரசர்கள் 6:3).
 
2 குறிப்பேடு 3:4 ஒரு எதிர்பாராத அளவைக் குறிப்பிடுகிறது. அதாவது, முன் மண்டபத்தின் உயரம் 120 முழம் என்று அங்கே உள்ளது. இவ்வளவு உயரம் இருந்தால் அது ஒரு "கோபுரமாக" மாறிவிடும். எனவே இந்த 120 முழம் என்னும் அளவை ஒருவேளை விவிலிய பாடச் சிதைவின். காரணமாகத் தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.
 
கோவிலின் முன் மண்டபத்தை அதற்கு அடுத்திருந்த அறையிலிருந்து பிரிக்க ஒரு சுவர் இருந்ததா என்று குறிப்பு இல்லை.
 
கோவிலின் முன் மண்டபத்தின் முன்னிலையில்.இரு தூண்கள் நிறுத்தப்பட்டன. "யாக்கின்" என்றும் "போவாசு" என்றும் பெயர்கொண்ட அவ்விரு தூண்கள் ஒவ்வொன்றின் உயரமும் 18 முழம் (காண்க: 1 அரசர்கள் 7:21; 2 அரசர்கள் 11:3; 23:3).
 
==சாலமோன் கோவிலின் தூண்கள்==
 
கோவில் முன்மண்டபத்திற்கு முன்னால் நிறுத்த்தப்பட்ட இரு தூண்களுள் ஒன்றாகிய "போவாசு" இடது புறமும் (வடக்கு), "யாக்கின்" என்னும் தூண் வலது புறமும் (தெற்கு) எழுப்பப்பட்டன (காண்க: 1 அரசர்கள் 7:15; 7:21; 2 அரசர்கள் 11:14; 23:3). அவற்றின் அளவைகளை எரேமியா குறிப்பிடுகிறார்: "தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது" (எரேமியா 52:21).
 
மேலும், "தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன" (எரேமியா 52:22).
 
இத்தூண்கள் பற்றிய விரிவான விவரிப்பு 1 அரசர்கள் 7:15-22இல் உள்ளது:
{{cquote|சாலமோன் இரண்டு வெண்கலத் தூண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. அத்தூண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். அவர் அவ்விரு தூண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார். மேலும் அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் தூணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்; மற்றதற்கும் அவ்வாறே செய்தார். முன்மண்டபத் தூண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம். மேலும் தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன. இவ்விரு தூண்களையும் தூயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய தூணுக்கு 'யாக்கின்' என்றும் வடபுறம் நாட்டிய தூணுக்குப் 'போவாசு' என்றும் பெயரிட்டார். தூண்களின் உச்சியில் அல்லி மலர் வேலைப்பாடு இருந்தது. இவ்வாறு தூண்களின் வேலைப்பாடு முடிவுற்றது.}}
 
இங்கே சாலமோன் கோவில் தூண்கள் "வெண்கலத்தால்" ஆனவை என்றுளது. ஆனால் ஈயம் என்னும் உலோகம் அக்கால எபிரேயருக்குத் தெரியாததாலும், அதைக் கலந்தே தாமிரம் அல்லது துத்தநாகம் வெண்கலமாகும் என்பதாலும், இங்கே பயன்படுத்தப்படும் "nehosheth" என்னும் எபிரேயச் சொல் தாமிரம் அல்லது துத்தநாகத்தைக் குறிக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
முன் மண்டபத்தில் நிறுத்தப்பட்ட "யாக்கின்" மற்றும் "போவாசு" என்னும் இரு தூண்களும் தனித்து நின்றன என்று தெரிகிறது.
 
==சாலமோன் கோவிலின் அறைகள்==
 
கோவிலின் சுவரைச் சுற்றி, அதாவது கருவறையையும் தூயகத்தையும் சுற்றியிருந்த சுவரை ஒட்டி, தெற்கு மேற்கு வடக்கு என்று முப்புறமும் மேடை எழுப்பப்பட்டது. அந்த மேடையின் மேல் அடுக்கடுக்காகச் சிற்றறைகள் கட்டப்பட்டன.
 
அவற்றுள் கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமும் கொண்டிருந்தன (காண்க: 1 அரசர்கள் 6:5-10). முதலில் ஒரு மட்டம் இருந்தது என்றும், பின்னர். இரண்டாம், மூன்றாம் மாடி அறைகள் கட்டப்பட்டன என்றும் சில அறிஞர் கூறுகின்றனர். இந்த அறைகள் பொருள்களைப் பாதுகாக்கும் கிடங்குகளாகப் பயன்பட்டிருக்கலாம்.
 
==சாலமோன் கோவிலின் இரு முற்றங்கள்==
 
சாலமோன் கோவிலைச் சுற்றி, "உள் முற்றம்" என்றும் "பெரிய முற்றம்" என்றும் இரு முற்றங்கள் இருந்தன.
 
;உள் முற்றம்
இது "குருக்களின் முற்றம்" என்றும் அழைக்கப்பட்டது. இந்த.உள் முற்றத்தின் சுவர்கள் மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசக் கேதுரு கட்டைகளாலும் அமைக்கப்பட்டது (காண்க: 1 அரசர்கள் 6:36).
 
இம்முற்றத்தில் அமைந்திருந்த பொருள்கள்:
*எரிபலி ஒப்புக்கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட பீடம் (2 குறிப்பேடு 15:8).
*மூவாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும் அளவுடைய பிரமாண்டமான வெண்கலத் தொட்டி ("வார்ப்புக் கடல்")
*வேறு பத்து வெண்கலத் தொட்டிகள்
*இருபது முழ நீளம், இருபது முழ அகலம், பத்து முழ உயரம் கொண்ட வெண்கலப் பலிபீடம்
 
;பெரிய முற்றம்
பெரிய முற்றம் என்னும் பகுதி கோவில் முழுவதையும் சுற்றி அமைந்தது (2 குறிப்பேடு 4:9). இங்குதான் மக்கள் வழிபாட்டுக்காக வந்து கூடினார்கள். எரேமியா இறைவாக்கினர் இங்கு நின்றுகொண்டுதான் மக்களை நோக்கி, எருசலேமுக்கு அழிவு வரும் என்று இறைவாக்கு உரைத்தார் (காண்க: எரேமியா 19:14; 26:2).
 
==சாலமோன் கோவிலில் இருந்த "வார்ப்புக் கடல்"==
 
ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை 30 முழம் விட்டமும், 5 முழம் ஆழமும், 30 முழம் விளிம்புச் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான தொட்டி "வார்ப்புக் கடல்" (''brazen sea'') அல்லது "வெண்கலக் கடல்" என்று அழைக்கப்பட்டது. வார்ப்புக் கடலை 1 அரசர்கள் 7:23-26 கீழ்வருமாறு விவரிக்கிறது:
{{cquote|23 சாலமோன் 'வார்ப்புக்கடல்' அமைத்தார். அது வட்ட வடிவமாய் இருந்தது. அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம். அதன் விளிம்பைச் சுற்றிலும் கீழே முழத்திற்குப் பத்தாக மொக்கு வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு வரிசையில் இருந்த மொக்குகளும் அந்த வார்ப்புக் கடலோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன. அது பன்னிருகாளை வடிவங்களின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கி இருந்தன. அவற்றின்மேல் வார்ப்புக்கடல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் பின்புறங்கள் உள்நோக்கி இருந்தன. வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.}}
 
1 அரசர்கள் நூல்படி, "வார்ப்புக் கடலின்" கொள்ளளவு 90 கன முழம் (2000 குடம்). ஆனால், 2 குறிப்பேடு நூல் "வார்ப்புக் கடல் மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்" என்று கூறுவது (2 குறிப்பேடு 4:5-6) மிகைக்கூற்றாக இருக்கலாம். "குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் 'கடல்' பயன்படுத்தப்பட்டது" என்றும்.அங்கே கூறப்பட்டுள்ளது.
 
பெரிய அளவில் அமைந்த "வார்ப்புக் கடல்" தவிர, வேறு பத்து "வெண்கலத் தொட்டிகளும்" கோவிலின் உள் முற்றத்தில்.அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தொட்டியும் வெண்கலத்தால் ஆன ஒரு தள்ளுவண்டியின் மேல் வைக்கப்பட்டது.
 
அத்தள்ளுவண்டி எவ்வாறு இருந்தது என்பதை 1 அரசர்கள் நூல் (7:27-37) மிக விரிவாகவும் துல்லியமாகவும் விவரிக்கிறது. அதன் சுருக்கம் இதோ:
 
ஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது.
அவற்றுக்குக் குறுக்குக் கம்பிகள் இருந்தன. அவை சட்டங்களின் மேல் இணைக்கப்பட்டிருந்தன. சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன.
 
ஒவ்வொரு வண்டிக்கும் நான்கு வெண்கலச் சக்கரங்களும், வெண்கல அச்சுகளும், அதன் நான்கு மூலைகளிலும் தொட்டியைத் தாங்க நான்கு முட்டுகளும் இருந்தன. அந்த முட்டுகள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் தோரணங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. அதன் வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. சக்கரங்களின் உயரம் ஒன்றரை முழம். சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. வண்டியின் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு செதுக்கப்பட்டன.
 
இவ்வாறு செய்யப்பட்ட பத்து வண்டிகளின் மீதும் பத்து வெண்கலத் தொட்டிகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம். ஐந்து வண்டிகள் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகள் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தப்பட்டன. வார்ப்புக் கடல் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட்டது.
 
==குறிப்புகள்==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/சாலமோனின்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது