விவிலிய இறை ஏவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
வரிசை 1:
[[Image:The Evangelist Matthew Inspired by an Angel.jpg|thumb|மத்தேயு நற்செய்தி ஆசிரியருக்கு வானதூதர் வழி இறை ஏவுதல் கிடைத்தல். ஓவியர்:ரெம்ப்ராண்ட் (1606-1669). ஓலாந்து.]]
'''விவிலிய இறை ஏவுதல்''' (''Biblical inspiration'') என்பது [[கிறித்தவம்|கிறித்தவர்களின்]] திருநூலாகிய [[விவிலியம்]] கடவுளிடமிருந்து வந்தது என்றும், அதை விவிலிய பாடத்திலிருந்தும், கிறித்தவ மரபிலிருந்தும், திருச்சபைப் போதனையிலிருந்தும் நிரூபிக்க இயலும் என்றும் கூறுகின்ற [[கிறித்தவ இறையியல்|இறையியல்]] கொள்கை ஆகும்.
 
==இறை ஏவுதல் - சொற்பிறப்பு==
 
இறை ஏவுதல் என்னும் சொல்லமைப்பு இலத்தீன் மொழியில் அமைந்த inspiratio (ஆங்கிலம்: inspiration) என்பதிலிருந்து பிறப்பதாகும். இச்சொல்லுக்கு அடிப்படையாக அமைவது [[விவிலியம்|விவிலியத்தில்]] வருகின்ற ஒரு சொற்றொடர் ஆகும். அது [[2 திமொத்தேயு (நூல்)|திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்]] என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலில் உள்ளது. ''':
{{cquote|"மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்"''' (2 திமொதிமொத்தேயு 3:16-17) என்பதே அச்சொற்றொடர் ஆகும்.}}
 
இதில்இந்த விவிலியக் கூற்றில் வருகின்ற "கடவுளின் தூண்டுதல்" என்பது கிரேக்க மூல பாடத்தில் theopneustos என்றும், இலத்தீனில் divinitus inspirata (ஆங்கிலம்: divinely inspired) என்றும் உள்ளது. விவிலியம் என்னும் திருநூல் தொகுப்பு '''கடவுளின் தூண்டுதலால்''' (இறை ஏவுதலால்) எழுதப்பட்டது என்பதை வெவ்வேறு [[திருச்சபை|திருச்சபைப்]] பிரிவுகள் வெவ்வேறு விதங்களில் புரிந்துகொண்டுள்ளன.
 
==இறை ஏவுதல் பற்றிய விவிலியச் சான்றுகள்==
வரி 20 ⟶ 21:
 
[[2 பேதுரு (நூல்)|பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்]] என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு நூல்]] இவ்வாறு கூறுகிறது:
 
"{{cquote|மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல" (2 பேது 1:20-21).}}
 
[[பழைய ஏற்பாடு]] கடவுளிடமிருந்து வந்தது என்னும் உணர்வு [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலும்]] உள்ளது. சான்றாக [[இயேசு கிறித்து|இயேசுவின்]] சாட்சியத்தைக் காட்டலாம்:
வரி 35 ⟶ 37:
==இறை ஏவுதல் பற்றிய யூத மரபுச் சான்றுகள்==
 
யூத மக்கள் [[விவிலியம்]] எனக் கொள்கின்ற [[பழைய ஏற்பாடு]] கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்டது என்பது அவர்களது நம்பிக்கை. இதை மறுத்த யூதர்கள் நாத்திகர் என்று அழைக்கப்பட்டனர். கி.பி. முதல் நூற்றாண்டவரான் ஃபிளாவியுசு யோசேப்பு (Flavius Josephus) என்னும் யூத அறிஞர் (கி.பி.37-95) இவ்வாறு கூறுகிறார்: "
{{cquote|ஒவ்வொரு யூதனும், சிறு வயது முதல் விவிலிய நூல்களை இறைவாக்காக ஏற்றுக்கொள்கிறான். அதில் எதையும் மாற்றவோ, குறைக்கவோ, கூட்டவோ துணியமாட்டான். ஏன், அதற்காகத் தன் உயிரையே கொடுப்பான்"<ref>[http://www.newadvent.org/cathen/08045a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - விவிலிய இறை ஏவுதல்]</ref>.}}
 
==இறை ஏவுதல் பற்றிய கிறித்தவ மரபுச் சான்றுகள்==
வரி 80 ⟶ 83:
கடவுள் வெளிப்படுத்தும் உண்மை "மீட்பு உண்மை" (salvific truth) என அழைக்கப்படுகிறது. அதாவது, மனிதர் கடவுளின் திருவுளத்துக்கு ஏற்ப இவ்வுலகில் வாழ்ந்திடவும், அவர்கள் தம் இறுதிக் கதியாகிய விண்ணகப் பேரின்பம் அடைந்திடவும் கடவுள் அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு, நிலைவாழ்வில் பங்கேற்கச் செய்கிறார் என்பதே "மீட்பு உண்மை". இது [[இயேசு கிறித்து]] வழியாக வெளிப்படுத்தப்பட்டதை [[விவிலியம்]] பதிவுசெய்துள்ளது. ஆக, விவிலியத்தில் அறநெறிப் போதனை அடங்கியுள்ளது; இறை வழிபாடு பற்றிய படிப்பினைகள் உள்ளன; கடவுள் மனிதரோடு எவ்வாறு உறவாடுகிறார் என்பது பற்றிய விளக்கம் உள்ளது. இதன் அடிப்படையில் திருச்சபையும் விவிலியம் கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்டது என்று கற்பிக்கிறது.
 
எனவே, விவிலியத்தில் "மீட்பு வரலாறு" (salvation history) அடங்கியுள்ளது என [[கிறித்தவம்|கிறித்தவர்கள்]] நம்புகிறார்கள். உலகு பற்றியும், வரலாறு பற்றியும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கொள்கைகள் பற்றியும் துல்லியமான தகவல்களை வழங்குவதன்று [[விவிலியம்|விவிலியத்தின்]] நோக்கம். இது பற்றி தூய அகுஸ்தீன் (கி.பி. 354-430) கூறுவது கருதத்தக்கது: "
{{cquote|விவிலியம் எழுதப்பட்டது மனிதர் எப்படி வானகம் செல்ல இயலும் என்பதைக் கற்பிக்கவே ஒழிய, வானகத்தில் கோள்கள் எவ்வாறு செல்கின்றன என்பதைக் கற்பிக்க அல்ல" <ref>[http://www.catholic.com/thisrock/1998/9803fea3.asp அகுஸ்தீன் - விவிலியம் எழுதப்பட்டதன் நோக்கம்]</ref>}}
 
நவீன அறிவியல் [[விவிலியம்]] எழுதப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கவில்லை. மக்கள் பூமி தட்டையாக இருக்கிறது என்றும் கதிரவன் பூமியைச் சுற்றிவருகிறது என்றும், அதனாலேயே இரவும் பகலும் ஏற்படுகின்றன என்றும் நம்பினர். 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கொப்பேர்னிக்கசு (கி.பி. 1473-1543) மற்றும் கலிலேயோ கலிலேயி (கி.பி. 1564-1642) போன்ற அறிவியலார் பூமிதான் கதிரவனைச் சுற்றிவருகிறது என்று விளக்கினர். எனவே, விவிலியத்தில் அறிவியல் உண்மைகளைத் தேடுவது பொருத்தமற்றது.
"https://ta.wikipedia.org/wiki/விவிலிய_இறை_ஏவுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது